Monday, May 26, 2014

இன்று சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு?

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
பெரும்பாலும் திங்கள்கிழமை (மே 26)
வெளியிடப்படலாம் என தகவல்கள்
தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்வை தமிழகத்திலிருந்து 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்
எழுதியுள்ளனர்.
பொறியியல், மருத்துவப்
படிப்புகளுக்கு விண்ணப்ப
விநியோகங்கள் தொடங்கியுள்ள
நிலையில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2
தேர்வு முடிவுகள் மட்டும்
இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில்,
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம்
எழுதிய சி.பி.எஸ்.இ. இயக்குநர் மே 28-
க்குள் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள்
வெளியாகும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பி.இ. விண்ணப்பங்களைச்
சமர்ப்பிப்பதற்கான தேதியும் மே 20-
லிருந்து மே 27-ஆக நீட்டிக்கப்பட்டது. இந்த
நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
பெரும்பாலும்
திங்கள்கிழமை மாலை வெளியாக
வாய்ப்புள்ளதாக சி.பி.எஸ்.இ.
பள்ளிகளின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, சென்னை மண்டல
சி.பி.எஸ்.இ. அலுவலர் டி.
சுதர்சனராவிடம் கேட்டபோது, ""பிளஸ் 2
தேர்வு முடிவு தொடர்பாக
இதுவரை தகவல்கள் உறுதியாகத்
தெரியவில்லை. தேர்வு முடிவுகள்
எப்போது வெளியாகும்
என்பது திங்கள்கிழமை காலை உறுதிப்படுத்தப்படும்''
என்றார்.

No comments:

Post a Comment