Sunday, May 04, 2014

இன்ஜி., விண்ணப்பம் வினியோகம் துவக்கம் திருச்சி, பெரம்பலூரில் 3,057 விற்பனை

திருச்சி: இன்ஜினியரிங் கல்லூரி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு,
நேற்று ஒரே நாளில், திருச்சி மற்றும் பெரம்பலூரில் 3,057 விண்ணப்பம்
விற்பனையானது.

அண்ணா பல்கலையின் பொறியியல்
பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பம், நேற்று, தமிழகம்
முழுவதும் வழங்கப்பட்டது. திருச்சியில்
ஜமால் முகமது கல்லூரி, பாரதிதாசன்
தொழில்நுட்ப மையம்,
துவாக்குடி அரசு பாலிடெக்னிக்
ஆகிய இடங்களில், விண்ணப்ப
விற்பனை நேற்று காலை, 9.30
மணிக்கு துவங்கியது.
மூன்று மையங்களுக்கும், மொத்தம், 9,200
விண்ணப்பங்கள் வந்தது. முதல் நாளான
நேற்று, திருச்சி மாநகரில் உள்ள ஜமால்
முகமது கல்லூரியில் விண்ணப்பம் பெற
மாணவ, மாணவியர், பெற்றோர்
குவிந்தனர். நீண்ட வரிசையில்
காத்திருந்து விண்ணப்பம் பெற்றனர்.
பொது பிரிவு மாணவர்களுக்கு, 500
ரூபாய்க்கும், எஸ்.ஸி.,- எஸ்.டி.,
பிரிவினருக்கு, 250 ரூபாய்க்கும்
விண்ணப்பம் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மட்டும், பாரதிதாசன்
தொழில்நுட்ப மையத்தில், 221,
துவாக்குடி அரசு பாலிடெக்னிக்கில்,
276, ஜமால் முகமது கல்லூரியில், 2,200
என மொத்தம், 2,697 விண்ணப்பம்
விற்பனையானது. வரும், 20ம்
தேதி வரை விண்ணப்பம்
விற்பனை செய்யப்படுகிறது.
* பெரம்பலூரில் விண்ணப்ப
வினியோகத்தை,
ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங்
கல்லூரி வளாகத்தில்,
ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின்
தாளாளர் சிவசுப்ரமணியன்
நேற்று துவக்கி வைத்தார்.
பெரம்பலூரில் முதல் நாளான
நேற்று பொது பிரிவினருக்கு, 290,
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 70 என,
360 விண்ணப்பங்கள் விநியோகம்
செய்யப்பட்டது.

No comments:

Post a Comment