Saturday, May 24, 2014

திருச்சி மாவட்டத்தில் 40 அரசு பள்ளிகள் "சென்டம்'

திருச்சி மாவட்டத்தில்,"சென்டம்' எடுத்த பள்ளிகளின் எண்ணிக்கை, கடந்த
ஆண்டை விட, நடப்பாண்டு குறைந்துள்ளது.

திருச்சி, முசிறி,
லால்குடி ஆகிய
மூன்று கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய
திருச்சி மாவட்டத்தில், 418 பள்ளிகளை சேர்ந்த,
39,642 மாணவ, மாணவியர் எஸ்.எஸ்.எல்.ஸி.,
தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள்,
நேற்று காலை வெளியானது. இதில், 36,651
பேர் தேர்ச்சி பெற்றனர். 92.45 சதவீதம் உள்ளது.
இது கடந்த ஆண்டை விட, 2.69 சதவீதம்
குறைவு. தேர்ச்சி சதவீதத்தில், மாநில
அளவில், திருச்சி மாவட்டம்,
16வது இடத்தை பிடித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில், 196 அரசு பள்ளிகளில்,
40 அரசு பள்ளிகள், 100 சதவீதம்
தேர்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டு, 43
பள்ளிகள், 100 சதவீதம்
தேர்ச்சி அடைந்திருந்தன. கடந்த ஆண்டை விட
நடப்பாண்டு, "சென்டம்' எடுத்த பள்ளிகளின்
எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
செல்வக்குமார் கூறுகையில், 36
அரசு பள்ளிகள், கடந்த ஆண்டு, "சென்டம்'
எடுத்திருந்தன. இந்த ஆண்டு, 40 பள்ளிகள்
"சென்டம்' எடுத்துள்ளன, என்று தவறாக
குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment