Saturday, May 24, 2014

8 மாநகராட்சிப் பள்ளிகளில் 2 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி

திருச்சி மாநகராட்சியிலுள்ள 8 பள்ளிகளில் இரு பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

திருச்சி மாநகராட்சி சிறீரங்கம் மேலூர்
கீழத்தெருவிலுள்ள அய்யனார்
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்
தேர்வெழுதிய 17 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோல, செந்தண்ணீர்புரம்
பாரி தெருவிலுள்ள மாநகராட்சி உயர்நிலைப்
பள்ளியில் தேர்வெழுதிய 39 பேரும்
தேர்ச்சி பெற்றனர்.
திருவானைக்கா காசித்தோப்பு மாநகராட்சி உயர்நிலைப்
பள்ளி மாணவர்கள் 21 பேரில் 20 பேர்
தேர்ச்சி பெற்றனர்.
திருவளர்ச்சோலை மேலத்தெருவிலுள்ள
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியின் 32 பேரில்
29 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மேலக்கல்கண்டார்கோட்டை மாநகராட்சி உயர்நிலைப்
பள்ளியில் 39 பேரில் 38 பேர் தேர்ச்சி பெற்றனர்.
விமான நிலையம் காமராஜ் நகர்
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 25 பேரிóல்
23 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கேகே நகர்
ராணி அண்ணாதுரை தெருவிலுள்ள
மாநகராட்சி உயர்நிலைப் பள்யில் 37 பேரில் 36
பேர் தேர்ச்சி பெற்றனர். கீழரண் சாலையிலுள்ள
டாக்டர் மதுரம் மாநகராட்சி மேல்நிலைப்
பள்ளியில் 33 பேரில் 30 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மொத்தத்தில் 8 பள்ளிகளில்
இருந்து தேர்வெழுதிய 243 பேரில் 232 பேர்
தேர்ச்சி பெற்றனர்.
கேகே நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்
இருந்து தேர்வெழுதிய எம். சையது உசேன் 492
மதிப்பெண்கள் எடுத்து, மாநகராட்சிப்
பள்ளிகளில் முதலிடத்தையும்,
மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில்
முதலிடத்தையும் பெற்றார். இவர் பெற்ற
மதிப்பெண்கள்- தமிழ்- 97, ஆங்கிலம்- 97,
கணிதம்- 98, அறிவியல்- 100, சமூக
அறிவியல்- 99.
கேபி. ஐஸ்வர்யா அறிவியலில்
நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவரது மொத்த மதிப்பெண்- 481. ஏ.
ரகமதுனிசா 471 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment