Friday, May 23, 2014

90.7 சதவீத மாணவ– மாணவிகள் தேர்வு: கணிதத்தில் 18,682 பேர் 100–க்கு 100 மார்க்

இன்று வெளியான 10–வது வகுப்பு தேர்வை மொத்தம் 11 லட்சத்து 13 ஆயிரத்து 475 பேர் எழுதினார்கள்.
பள்ளிக் கூடங்களில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 138 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மொத்த தேர்வு விகிதம் 90.7 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்வு சதவீதம் 89 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பள்ளிக ளில் தேர்வு எழுதிய மாணவர்களில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 86 சதவீதமாக இருந்தது.
வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாணவிகள் 4 லட்சத்து 68 ஆயிரத்து 810 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.6 சதவீதம் ஆகும்.
7 லட்சத்து 10 ஆயிரத்து 10 மாணவ– மாணவிகள் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். கணக்கு பாடத்தில் 18 ஆயிரத்து 682 பேர் 100க்கு 100 மார்க் வாங்கி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 29 ஆயிரத்து 905 பேர் 100–க்கு 100 மார்க் வாங்கி இருந்தனர்.
அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு 38 ஆயிரத்து 154 பேர் 100–க்கு 100 மார்க் வாங்கி இருந்தனர். இந்த வருடம் 69 ஆயிரத்து 560 பேர் 100–க்க 100 வாங்கி உள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் இந்த ஆண்டு 26 ஆயிரத்து 554 மாணவ – மாணவிகள் 100–க்கு 100 மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். தமிழில் 255 பேரும், ஆங்கிலத்தில் 677 பேரும் 100–க்கு 100 மார்க்கு வாங்கி இருக்கிறார்கள்

No comments:

Post a Comment