Thursday, May 15, 2014

சாரண ஆசிரியர்களுக்கான ஏழு நாள் பயிற்சி முகாம்

முசிறியில் மாநில அளவிலான சாரண
ஆசிரியர்களுக்கான ஏழு நாள் பயிற்சி முகாம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள நேரு பூங்காவில் நடந்தது.
 மாநில முதன்மை ஆணையர் ஹரிஸ்மேத்தா, மாநில
தலைமை ஆணையர் ராஜேந்திரன், மாநில
செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோரின்
உத்தரவின்படி நடந்த மாநில அளவிலான
சாரண ஆசிரியர் பயிற்சி முகாமை, திருச்சி மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார்
துவக்கி வைத்தார்.
முகாமின் தலைவர்களாக மாநில
பயிற்சி ஆணையர்கள் சுந்தரமூர்த்தி, இளையகுமார்,
வெங்கட்ரமணன், வேல்முருகன், கற்பகம்,
ரேவதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
முகாமில் சாரண ஆசிரியர்களுக்கான
அடிப்படை பயிற்சி, சாரணிய ஆசிரியர்களுக்கான
அடிப்படை பயிற்சி, குருளையர் ஆசிரியர்களுக்கான
அடிப்படை பயிற்சி, முன்னோடி பயிற்சி உட்பட நடந்த
பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டன.
பயிற்சியில், முசிறி, திருச்சி, கரூர், கோயம்புத்தூர், மதுரை,
நாமக்கல், பொள்ளாச்சி,
திருநெல்வேலி உட்பட மாநிலத்தின்
பல்வேறு பகுதிகளிலிருந்து 170 ஆசிரிய, ஆசிரியைகள்
பங்கேற்று சாரண உறுதிமொழி, சட்டம்,
கொடியேற்று முறை, பாடல்கள்,
விளையாட்டுகள், தலைமைத்துவ பயிற்சி, முதலுதவி,
மதிப்பீடு, நிலப்படக்கலை முதலான தலைப்புகளில்
பயிற்சி பெற்றனர். முகாம்
உதவியாளர்களாக திவேல், முருகையன்,
மோகன்ராஜ், கார்த்தாயினி ஆகியோர்
பணியாற்றினர்.
பயிற்சி நிறைவு நாளன்று நடந்த விழாவிற்கு முகாம்
ஒருங்கிணைப்பாளர் திருச்சி மண்டல செயலர்
ஸ்ரீதரன் வரவேற்றார். முசிறி மாவட்ட
கல்வி அலுவலர் செல்வராஜ்
பயிற்சி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தும்,
பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்ற
சாரண ஆசிரிய, ஆசிரியைகளையும்,
பாராட்டி பேசினார். மண்டல அமைப்பு ஆணையர்
மனோகரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment