Sunday, May 18, 2014

ஆர்.டி.இ., விண்ணப்ப வினியோகம்: வேகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

'இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், விண்ணப்ப வினியோகத்தை வேகப்படுத்த வேண்டும்' என, சென்னையில், நேற்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், இயக்குனர், பிச்சை உத்தரவிட்டார்.

ஆர்.டி.இ., கீழ், 60 ஆயிரம் இடங்கள் உள்ள போதும்,
8,000 விண்ணப்பங்கள்
மட்டுமே வினியோகிக்கப்பட்டு உள்ளன.
விண்ணப்பம் வழங்க, வரும், 31ம் தேதி கடைசி நாள்.
போதிய அளவிற்கு, தனியார் பள்ளிகள்
விண்ணப்பம் வழங்காதது, கல்வித்
துறையை கவலை அடையச் செய்துள்ளது.
இந்நிலையில், மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர்களை நேற்று சென்னைக்கு அழைத்து,
இயக்குனர், பிச்சை ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாவட்ட வாரியாக, குறைவான
எண்ணிக்கையில் விண்ணப்பம்
வினியோகித்திருப்பதை சுட்டிக்காட்டி,
விண்ணப்ப வினியோகத்தை, வேகப்படுத்த
வேண்டும் என, இயக்குனர் உத்தரவிட்டார். மிக மிக
குறைவாக விண்ணப்பம் வழங்கப்பட்ட
மாவட்டங்களின் அதிகாரிகளுக்கு, 'டோஸ்'
விழுந்ததாக, துறை வட்டாரம் தெரிவித்தது.
மொத்தம் உள்ள, 60 ஆயிரம் இடங்களில், 25 சதவீத
இடங்கள் நிரம்புமா என்பது சந்தேகமாக உள்ளது.
கடந்த ஆண்டு, 40 ஆயிரத்திற்கும் அதிகமான
இடங்கள் நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு,
தனியார் பள்ளிகள், தொடர்ந்து முரண்டு பிடிப்பது,
கல்வித் துறையை அதிர்ச்சி அடையச்
செய்து உள்ளது.

No comments:

Post a Comment