Tuesday, May 13, 2014

பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நீட்டிப்பு

திருச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள்
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் கலந்து கொள்ளும்
வகையில் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் தெரிவித்தார்.
 சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டதில் தேர்ச்சி பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு
திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள
ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இந்த
பணி நேற்றுடன் முடிந்தது.
கடந்த ஒரு வாரமாக நடந்த சான்றிதழ்
சரிபார்ப்பில் மொத்தம் ஆயிரத்து 93
பட்டதாரி ஆசிரியர்களில் ஆயிரத்து 52
பேர் பங்கேற்றனர். 41 பேர்
பங்கேற்கவில்லை. இந்நிலையில்
பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ்
சரிபார்ப்பு பணி இன்று (
செவ்வாய்க்கிழமை)
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று வரை நீட்டிப்பு
இது குறித்து திருச்சி மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரி செல்வகுமார்
கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதி தேர்வில்
தேர்ச்சி பெற்ற
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த
பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ்
சரிபார்ப்பு பணி நேற்றுடன் முடிந்தது.
இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியில்
பங்கேற்காத பட்டதாரி ஆசிரியர்கள்
கலந்து கொள்ளும் வகையில்
இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே கடந்த ஒருவாரமாக நடந்த சான்றிதழ்
சரிபார்ப்பு பணியில் பங்கேற்க முடியாத
தகுதியான பட்டதாரி ஆசிரியர்கள்
இன்று கலந்து கொள்ளலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment