Sunday, May 11, 2014

தமிழ்நாடு முழுவதும் பள்ளி வேன்–பஸ்களில் பாதுகாப்பு அம்சம் ஆய்வு

கோடை கால விடுமுறைக்கு பிறகு ஜூன் 3–ந்தேதி பள்ளிக் கூடங்கள் திறக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளில் மொத்தம் 36,389 வேன்–பஸ்கள் உள்ளன.
இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன் கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தர விட்டுள்ளது.
இதையொட்டி போக்குவரத்து துறை அதிகாரிகள் 33 குழுக்களை நியமித்து பள்ளி கூடங்களுக்கு சென்று பஸ், வேன்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
வாகனங்களில் அவசரகால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள் முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்பட 18 அம்சங்கள் கண்டிப்பாக இருக்கிறதா? என்று சோதனை செய்கின்றனர்.
இவை இல்லாத பஸ்களில் கண்டிப்பாக அவற்றை பொருத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
சோதனையின் போது வாகனங்களில் குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டால் தகுதி சான்று அளிக்கப்படாது என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

No comments:

Post a Comment