Thursday, May 22, 2014

பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி சதவீதப் பட்டியல்: அண்ணா பல்கலை இணைய தளங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து பொறியியல் கல்லூரிகளின்
செயல்பாடுகள் மற்றும் 2002 முதல் 2010-
ஆம் ஆண்டு வரையிலான மாணவர்
தேர்ச்சி சதவீதப்பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும்
என
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒரே மாதிரியான பெயர்
கொண்ட பொறியியல் கல்லூரிகளின்
பட்டியலைத் தனியாக வெளியிட
வேண்டும் எனவும் அந்த உத்தரவில்
கூறப்பட்டுள்ளது.
டி.பூபாலசாமி என்பவர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல
மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த
மனுவில், கடந்த 2012-ஆம்
ஆண்டு வரை தமிழகத்தில் 521
பொறியியல் கல்லூரிகள் இருந்தன.
அவற்றில் அரசு மற்றும்
அரசு உதவி பெறும் கல்லூரிகள் 29
ஆகும்.
இந்தக் கல்லூரிகளில் ஆண்டுதோறும்
ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2
லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள்
படிப்புகளில் சேருகின்றனர்.
அவர்களுக்கு ஒவ்வொரு கல்லூரி குறித்தும்
உண்மை நிலை உடனடியாக
தெரிவதில்லை. எனவே,
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்
செயல்படும் பொறியியல்
கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் மற்றும்
தரவரிசைப் பட்டியலை உடனடியாக
வெளியிட உத்தரவிட வேண்டும்.
மேலும், சில பொறியியல்
கல்லூரிகளின் பெயர்கள்
ஒரே மாதிரியாக உள்ளன. இதனால்,
மாணவர்கள் குழப்பமடையும்
நிலை ஏற்படுகின்றது. எனவே,
ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட
கல்லூரிகளை தனித்தனியாக
அடையாளம் கண்டு, அவற்றின் பெயர்
பட்டியலை தனியாக வெளியிட
பல்கலைக்கழகத்துக்கும், தமிழக
அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என
மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான
விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு)
சதீஷ் கே. அக்னிஹோத்ரி,
நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர்
கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள்
புதன்கிழமை பிறப்பித்த
உத்தரவு விவரம்:
அண்ணா பல்கலைக்கழகம் தனது கீழ் உள்ள
துறைகள், அரசு பொறியியல்
கல்லூரிகள், அரசு உதவி பெறும்
கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள்
உள்பட அனைத்து பொறியியல்
கல்லூரிகளின் செயல்பாடுகள் மற்றும்
அதன் தேர்ச்சி சதவீதப்
பட்டியலை புள்ளிவிவர அடிப்படையில்
2002 முதல் 2010-ஆம்
ஆண்டு வரை வெளியிட வேண்டும்
என்று கடந்த 2011ஆம் ஆண்டில்
உயர்நீதிமன்றம் இடைக்கால
உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஒரே மாதிரியான பெயர்கள்
கொண்ட பொறியியல் கல்லூரிகளின்
பட்டியலை தனியாக
அண்ணா பல்கலைக்கழகத்தின்
இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இது தவிர, ஒரே மாதிரியான
அல்லது தவறான பெயர்களைப்
பயன்படுத்தும் பொறியியல்
கல்லூரிகளுக்கு எதிராக சட்ட
விதிகளுக்குட்பட்டு குற்றவியல் மற்றும்
சிவில்
நடவடிக்கைகளை எடுப்பதற்கு அகில
இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்
மற்றும் சுயநிதி பொறியியல்
கல்லூரிகளின் சங்கத்துக்கு அதிகாரம்
உள்ளது.
மேலும், அரசு பொறியியல் கல்லூரிகள்,
அரசு உதவி பெறும்
கல்வி நிறுவனங்கள், மத்திய
அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும்
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில்
போதிய கட்டமைப்பு வசதிகள் மற்றும்
இதர வசதிகள் உள்ளனவா என்பதை அகில
இந்திய தொழில்நுட்பக்
கல்வி கவுன்சிலும்,
அண்ணா பல்கலைக்கழகமும்
அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்ட கல்லூரிகள்
தொடர்பான பட்டியலை இந்த
உத்தரவு நகல் கிடைக்கப் பெற்ற
இரண்டு வாரங்களுக்குள் "www.tndte.com'
மற்றும் "www.annauniv.edutnea 2014' ஆகிய
இணையதளங்களில் வெளியிட வேண்டும்
என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment