Saturday, June 21, 2014

கல்விசார் மேலாண்மை திட்டம்: சென்னையில் பயிற்சி மையம்

தமிழகத்தில் உள்ள
அனைத்து வகை பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் குறித்த விவரங்களுடன், கல்விசார் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யும்,
கல்விசார் மேலாண்மை தகவல்
முறைமை திட்டத்தின் பயிற்சி மையம்,
சென்னையில், நேற்று திறக்கப்பட்டது.

கடந்த, 2012-13ல், இத்திட்டம் அறிவிக்கப்பட்டு,
2013-14ம் கல்வி ஆண்டு முதல், திட்டம்
பயன்பாட்டிற்கு வரும் என, அறிவிக்கப்பட்டது.
இதுவரை, ஆசிரியர், மாணவர் விவரங்கள்
பெறப்பட்டு, திட்ட இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால்,
திட்டம், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும்
முன், திட்டம் குறித்து, தொழில்நுட்ப திறன்
வாய்ந்த ஆசிரியர்கள், திட்டத்தை செயல்படுத்த
உள்ள
அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காகவும், மாநில அளவில்
திட்டத்தை கண்காணிக்கவும், சென்னை,
பள்ளி கல்வித்துறை வளாகத்தில்,
சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
மையத்தை, பள்ளி கல்வி அமைச்சர் வீரமணி,
நேற்று, திறந்து வைத்தார். திட்ட
அலுவலர்களுக்கு,
அண்ணா பல்கலை ஆராய்ச்சி மைய
அலுவலர்கள், மூன்று மாதம், பயிற்சி அளிக்க
உள்ளனர். அதன்பின், திட்டம்
பயன்பாட்டுக்கு வரும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு மையம்
திறப்பு விழாவில்,
பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா,
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர்,
பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குனர்,
ராமேஸ்வர முருகன், தொடக்கக்
கல்வி இயக்குனர், இளங்கோவன் உட்பட பலர்
பங்கேற்றனர்.

No comments:

Post a Comment