Friday, June 20, 2014

பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும்

ஆசிரியர்கள் மற்றும்
தலைமையாசிரியர்களின் பணியிட
மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக
நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம்
கோரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள
ஆசிரியர்களுக்கான இடமாறுதல்,
பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 16-ஆம்
தேதி தொடங்கியது.
மேல்நிலைப் பள்ளித்
தலைமையாசிரியர்கள்
பதவி கலந்தாய்வு வியாழக்கிழமை
நடைபெற்றது.
இதில் சில மாவட்டங்களில்
காலிப்பணியிடங்கள் வெளிப்படையாகக்
காட்டப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, பணியிட மாறுதல்
கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் 100
சதவீதம் வெளிப்படையாகக் காட்டப்பட
வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளித்
தலைமையாசிரியர்கள் சங்கத்தின்
பொதுச்செயலாளர்
சாமி.சத்தியமூர்த்தி கோரினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:
கடந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளிகளாக
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்
பள்ளிகளில் இருந்து இடமாறுதல்
செய்யப்பட்ட உயர்நிலை பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கு இப்போதைய
கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்பட
வேண்டும்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ்
வட்டார வள மைய மேற்பார்வையாளர்களாக
இருந்த தலைமையாசிரியர்கள் நிதிப்
பற்றாக்குறை காரணமாக கடந்த டிசம்பர்
மாதம் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கும் இப்போதைய கலந்தாய்வில்
முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்
என்றார் அவர்.

No comments:

Post a Comment