Saturday, June 21, 2014

வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம்: டிஇடி தேர்வில் தேர்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரதம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற
மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்

என்பதை வலியுறுத்தி டிஇடி தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில்
நேற்று உண்ணா விரதம் இருந்தனர்.ஆசிரியர்
தகுதித் தேர்வில் 150க்கு, 90க்கும் மேல் மதிப்பெண்
பெற்று தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மத
ிப்பெண்ணால் பாதிக்கப்பட்டு, பணி நியமனம்
கிடைக்காதவர்கள் சென்னையில்
நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த
உண்ணா விரதம் குறித்து பட்டதாரிகள்
கூறியதாவது:கடந்த 2013ல் நடந்த டிஇடி தேர்வில்
நாங்கள் தேர்ச்சி பெற்றோம்.
அரசாணை 181ன்படி டிஇடி தேர்வில் 60 சதவீதம்
மதிப்பெண் பெற்றால் ஆசிரியர்
பணி என்று அறிவித்தார்கள்.
அதன்படி டிஇடி தேர்வில் மதிப்பெண்
பெற்று தேர்ச்சி பெற்றோம்.
எங்களுக்கு சான்று சரிபார்ப்பும், கடந்த
ஜனவரி மாதம் நடந்தது. பின்னர் 55 சதவீதம்
பெற்றால் போதும் என்ற அடிப்படையில் 5 சதவீதம்
அரசு தளர்த்தியது. இதற்காக அரசாணை 71
வெளியிடப்பட்டது. இதனால் டிஇடி தேர்வில் 60
சதவீதம் மதிப்பெண் பெற்ற நாங்கள்
பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 10
ஆண்டுக்கு முன்பு பள்ளிப் படிப்பு,
கல்லூரிப்படிப்பு முடித்தவர் பலர்
இருக்கிறோம்.இந்நிலையில்
அரசாணை 71ன்படி சலுகையின் மூலம்
தேர்ச்சி பெற்றவர்களால் நாங்கள்
பாதிக்கப்படுகிறோம். அதனால்,
டிஇடி தேர்வு மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற
மதிப்பெண்களை கணக்கிட்டு எங்களுக்கு பணி
நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு பட்டதாரிகள்
தெரிவித்தனர்.

No comments:

Post a Comment