Sunday, July 13, 2014

அண்ணாமலைப் பல்கலை. முதல்கட்ட பிஇ கவுன்சிலிங்: 1091 பேர் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் கடந்த ஜூலை 10,11 தேதிகளில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 ஆண்டிற்கான பிஇ படிப்பில் சேருவதற்கு 2545 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் கவுன்சிலங்கில் பங்கேற்க 2218 மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. 2 நாட்கள் நடைபெற்ற கவுன்சிலிங்கில் 1093 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் 1091 பேருக்கு அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் மெக்கானிக்கல், சிவில், எலக்டிக்ரானிக் அன்ட் எலக்டிரிகல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளை ஆர்வத்துடன் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்தாய்விற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தலைமையில் பதிவாளர் என்.பஞ்சநதம், பல்கலைக்கழக வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், பொறியியல் புல முதல்வர் டி.வேலுசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஜூலை 14-ல் கவுன்சிலிங் தொடக்கம்: பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு ஜூலை 14,15,16 தேதிகளிலும், பிபிடி, பி.பார்ம் மற்றும் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு ஜூலை 17-ம் தேதியும் கவுன்சிலிங் நடைபெறுகிறது. கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவ, மாணவியர்கள் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹம்ஹப்ஹண்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய்)  கலந்தாய்வு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவையல்லாமல் விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு கவுன்சிலிங் குறித்து ஸ்பீட் போஸ்ட் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலமும் தகவலும் அனுப்பப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment