Wednesday, July 02, 2014

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 84.38 லட்சம் பேர் என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது

அரசு வேலைக்காக
பதிவு செய்து காத்திருப்போரின்
எண்ணிக்கை 84.38 லட்சம் பேர் என தமிழக
அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
அதில்,
பெண்கள் மட்டும் 43 லட்சத்து 12 ஆயிரம்
பேர். கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான
காலகட்டத்தில், தமிழகம் முழுவதும்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்தவர்களின்
எண்ணிக்கை குறித்த பட்டியலை மாநில
அரசு வெளியிட்டுள்ளது. பட்டப்
படிப்பு வாரியாக பெயர்களைப்
பதிவு செய்துள்ள விவரங்கள்
தனித்தனியே தெரிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் முதல்
ஆசிரியர் பட்டப் படிப்பு படித்தவர்
வரை மட்டும் 77 லட்சம் பேர்
இருக்கின்றனர். அதிலேயே கலை,
அறிவியல், வணிகம், பொறியியல்,
மருத்துவம், வேளாண்மை, கால்நடை,
சட்டம் ஆகிய படிப்புகளை படித்தவர்கள்
மட்டும் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்
ஆவர். அரசுத் துறைகளில் ஏற்படும்
காலிப் பணியிடங்கள்
வேலைவாய்ப்பு அலுவலகம்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம்
நிரப்பப்படுகின்றன. அரசுத் துறைகளில்
ஏற்படும் காலியிடங்கள் குறித்த பட்டியல்
பெறப்பட்டு அவை பூர்த்தி செய்யப்படுகி
ன்றன. முக்கியத்துவம் வாய்ந்த மற்றும்
அதிகாரிகள் நிலையிலான பதவிகள்
அனைத்தும் தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம்
மூலமே மட்டுமே நிரப்பப்படுகின்றன
என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment