Friday, July 18, 2014

பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்

தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம்
ஓராண்டுதான்; மாற்றமில்லை,'' என,
உயர்கல்வித் துறை அமைச்சர்
தெரிவித்தார்.
சட்டசபையில், பள்ளிக்
கல்வி மற்றும் உயர்கல்வித்
துறை மானிய கோரிக்கை விவாதம்:
ம.ம.க., ஜவாஹிருல்லா:
பல்கலைக்கழக துணைவேந்தர்
நியமனத்தில்,
தேர்வு செய்யப்படுபவர்கள் பட்டியல்
வெளிப்படையாக, இணையதளத்தில்
வெளியிடப்பட வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: துணைவேந்தர்
நியமனம் என்பது, உரிய குழுக்கள்
அமைத்து தான்
தேர்வு செய்யப்படுகிறது.
பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,)
விதிமுறைப்படி தான்,
நியமிக்கப்படுகின்றனர். இதில்
ஒளிவு மறைவு என்பது இல்லை.
பார்வர்டு பிளாக், கதிரவன்:
தமிழகத்தில், பி.எட்., படிப்பு,
இரண்டாண்டாக மாற்றப்படுவதாக
கூறப்படுகிறது. எனவே, டி.இ.டி.,
தேர்வு எழுத வேண்டுமா?
பழனியப்பன்:
மத்திய ஆசிரியர் கல்வி வாரியம், பி.எட்.,
படிப்பை, இரண்டு ஆண்டு படிப்பாக
மாற்றுவது தொடர்பான
ஆலோசனையை தெரிவித்துள்ளது. மத்திய
அரசோ, மாநில அரசோ,
இதை அமல்படுத்தவில்லை.தமிழகத்தில்,
பி.எட்., படிப்பு ஓராண்டு மட்டும்
தான்.இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment