தொழிற்கல்வி ஆசிரியருக்கான 40 பணியிடங்கள் காலியாக உள்ளன; ஆசிரியர் பற்றாக்குறையால்,
இரண்டு பள்ளிகளில், பொது இயந்திரவியல் தொழிற்கல்வி, 3 ஆண்டுகளாக முடங்கியுள்ளது.
இரண்டு பள்ளிகளில், பொது இயந்திரவியல் தொழிற்கல்வி, 3 ஆண்டுகளாக முடங்கியுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும்
பிளஸ் 2 வகுப்புகளில்
தொழிற்கல்வி பிரிவு செயல்படுகிறது.
பொது இயந்திரவியல், அக்கவுண்டன்சி,
இன்ஜினியரிங் ஆடிட்டிங், அலுவலக நிர்வாகம்,
டைப்ரைட்டிங் உள்ளிட்ட
தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது.
தொழிற்கல்வி பிரிவு ஆசிரியர்கள்
பணி மாறுதல் பெற்று வேறு ஊருக்குச்
சென்றாலோ அல்லது பணி ஓய்வு பெற்றாலோ
மீண்டும் அந்த பணியிடத்தில் ஆசிரியர்
நியமிக்கப்படுவதில்லை.
இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள
அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி ஆசிரியருக்கான
40 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்
பற்றாக்குறையால், திருப்பூர் நஞ்சப்பா பள்ளி,
அவிநாசி அரசு பள்ளியில் பொது இயந்திரவியல்
தொழிற்கல்வி பிரிவு, மூன்று ஆண்டுகளாக
முடங்கியுள்ளது. திருப்பூர் கே.எஸ்.சி.,
அரசு பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி,
பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி மற்றும்
ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளிகளில் மட்டும்,
தொழிற்கல்வி ஆசிரியருக்கான எட்டு பணியிடம்,
நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன.
அரசு பள்ளிகளை சேர்ந்த மற்ற
ஆசிரியர்களுக்கு நடத்தப்படுவதுபோல்,
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பொது இட
மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுவதில்லை.
ஆசிரியர் எண்ணிக்கை குறைவு என்பதால்,
அவர்களை, இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க,
அனுமதிப்பதில்லை.
மேல்நிலைப்பள்ளி வகுப்புகளுக்கு,
தொழிற்கல்வி ஆசிரியர்கள் பாடம்
நடத்தியபோதும்,
உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம்
மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுவதால்,
தொழிற்கல்வி ஆசிரியர் மத்தியில்
அதிருப்தி நிலவுகிறது.
தரம் உயர்த்திய மேல்நிலைப்பள்ளிகளில்,
தொழிற்கல்வி பிரிவு துவங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். அங்கு தொழிற்கல்வி ஆசிரியர்
பணியிடம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை,
நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
தொழிற்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,
"ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல்
இருப்பதால், பல பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால், மாணவர் எண்ணிக்கை குறைகிறது. சில
பள்ளிகளில், குறிப்பிட்ட
தொழிற்கல்வி பிரிவை மூடும்
நிலை ஏற்பட்டுள்ளது. தொழிற்கல்வி பயிலும்
மாணவர்கள், நேரடியாக பொறியியல்
படிப்புக்கு செல்ல முடியும்.
தொழிற்கல்வி பிரிவை மூடுவதால்,
அவ்வாய்ப்பை மாணவர்கள் இழக்கின்றனர்.
அரசு பள்ளியில் பணி செய்தாலும், மற்ற
ஆசிரியர்களை போல் இல்லாமல்,
தொழிற்கல்வி ஆசிரியர்கள்
புறக்கணிக்கப்படுவது வருத்தமளிக்கிறது" என்றார
No comments:
Post a Comment