Thursday, July 10, 2014

பள்ளி பெயருக்கு பின் 'மெட்ரிக்' நீக்கம்? அரசின் ஆய்வில் இருப்பதாக தகவல்

தனியார் பள்ளிகளின் பெயர்களுக்கு பின்னால் சேர்க்கப்படும்,
'மெட்ரிக்குலேஷன்' போன்ற

வார்த்தைகளை நீக்கக் கோரிய மனு,
அரசின் ஆய்வில் இருப்பதாக,
சென்னை உயர் நீதிமன்றத்தில்
தெரிவிக்கப்பட்டது.மாணவர்களின்
கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
தாக்கல் செய்த மனு:
கடந்த, 2011 12க்கு முன், மாநில
கல்வி வாரிய பள்ளிகள்,
மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்,
ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்,
ஓரியண்டல் பள்ளிகள் என,
நான்கு கல்வி முறை இருந்தது.சமச்சீர்
கல்வி சட்டம், 2010ல், கொண்டு வரப்பட்டது.
'இந்தச் சட்டம் செல்லும்' என, சுப்ரீம் கோர்ட்
உத்தர விட்டது. பின், 2010 11ல், சமச்சீர்
கல்வி அமல்படுத்தப்பட்டது.
வெவ்வேறு கல்வி முறை,
பாடத்திட்டத்தை ரத்து செய்யும்
நோக்கில் தான், சமச்சீர் கல்வி சட்டம்
கொண்டு வரப்பட்டது. சமச்சீர்
கல்வி அமல்படுத்தப்பட்ட பின், மெட்ரிக்,
ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் முறை,
முடிவுக்கு வந்து விட்டது.
இருந்தாலும், தனியார் பள்ளிகள், தங்கள்
பெயர்களுக்கு பின்னால், 'மெட்ரிக்',
'ஆங்கிலோ இந்தியன்', 'ஓரியண்டல்' என,
சேர்த்துள்ளனர். பள்ளிகளின் பெயர்
பலகைகளில் உள்ள இந்த
வார்த்தைகளை நீக்க, உத்தரவிட
வேண்டும். இவ்வாறு, மனுவில்
கூறப்பட்டுள்ளது.இம்மனு,
தலைமை நீதிபதி (பொறுப்பு)
அக்னிஹோத்ரி,
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய,
'முதல் பெஞ்ச்' முன்,
விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில்,
கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி,
''இந்த பிரச்னை, அரசின் ஆய்வில்
உள்ளது,'' என்றார். இதையடுத்து,
விசாரணையை, ஒரு வாரத்துக்கு,
'முதல் பெஞ்ச்' தள்ளிவைத்தது.

No comments:

Post a Comment