Sunday, August 31, 2014

திருச்சியில் ஆசிரியர் கவுன்சலிங் துவக்கம்! முதல் நாளில் 24 பேருக்கு பணி ஆணை

தமிழக அரசின் உத்தரவை அடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு, பணி நியமன கவுன்சலிங், திருச்சியில் நேற்று துவங்கியது.
தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட, 14 ஆயிரத்து,700 ஆசிரியர்களுக்கான நியமன கவுன்சலிங், இணைய தளம் மூலம் நடத்தப்பட்டு உள்ளது.அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு இணைய தளம் மூலம் கவுன்சலிங் நடக்கிறது.திருச்சி சத்திரம் அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் பணி நியமன கவுன்சலிங், நேற்று துவங்கியது. செப்டம்பர், 5ம் தேதி வரை நடக்கிறது. நேற்று காலை, மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடத்துக்கான கவுன்சலிங் நடைபெற்றது.அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இணை இயக்குநர் நரேஷ், முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, அனைவருக்கும் கல்வி இயக்கம் கல்வி அலுவலர் கலையரசி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்டத்தில், 2012-13ம் ஆண்டு டி.ஆர்.பி.,- பி.ஜி.டி., ஆசிரியர்கள் தாவரவியல், 4, வேதியியல், 9, காமர்ஸ், 13. பொருளியல், 11, ஆங்கிலம்14, வரலாறு, 8, கணிதம், 11, மைக்ரோ பையாலஜி, 1, இயற்பியல், 12, விலங்கியல், 7 உள்ளிட்ட, 90 பேரும், 2011-12ம் ஆண்டு ஆசிரியர்கள் காமர்ஸ், 2, பொருளியல், 1 என, மூன்று பேருக்கு கவுன்சலிங் நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று நடந்த கவுன்சலிங்கில், , 24 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இன்று முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள்) கவுன்சலிங் நடக்கிறது.

No comments:

Post a Comment