Monday, August 04, 2014

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையில் ரூ. 25 லட்சத்தில் ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம்

எளிமையான முறையில் ஆங்கிலத்
திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையில் ரூ. 25 லட்சத்தில் ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம்
அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்கள், மாணவர்களின் மொழித்
திறனை மேம்படுத்தும் வகையில் அன
ைத்து மாவட்டங்களிலும் இத்தகைய
மையங்களைத் தொடங்கத் திட்டமிட்ட தமிழக
அரசு, திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத்
தொகுதியிலுள்ள
சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்
பள்ளி வளாகத்தில் இந்த
மையத்தை உருவாக்கியிருக்கிறது. கடந்த
பிப்ரவரி மாதத்தில் 1000 சதுர அடியில்
தொடங்கப்பட்ட இந்த மையத்துக்கான
பணிகள் ரூ. 25 லட்சத்தில் 3 மாதங்களில்
முடிக்கப்பட்டன.
என்னென்ன வசதிகள் : இந்த ஆய்வகத்தில்
இணையதள வசதியுடன் ஓரே நேரத்தில் 30
மாணவர்கள் ஆங்கிலப் பயிற்சி பெறும்
வகையில் கணினிகள் கொண்ட
தனி அறை உள்ளது. இதேபோல 60
இருக்கைகள் கொண்ட மற்றொரு அறையில்
எல்.சி.டி. புரஜக்டர் வசதி, பிரிண்டர்கள்,
நகலெடுக்கும் இயந்திரங்கள், குடிநீர்
வசதி, ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் உள்ளிட்ட
அனைத்து வசதிகளும் உள்ளன.
பயிற்சி யாருக்கு: அரசுப்
பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் ஊரகப்
பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால்,
ஆங்கிலத்தில் அவர்கள் தடுமாற்றத்தைச்
சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே அவர்களுக்கு சிறப்பாகப்
கற்பிக்கும் வகையில் முதலில்
ஆசிரியர்களுக்கும் பின்னர்
மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட
உள்ளது. அந்த வகையில் முதலில்
மாவட்டத்திலுள்ள அனைத்து உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளி ஆங்கில
ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட
உள்ளது. பள்ளி வாரியாக தலா 2 ஆங்கில
ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கான பட்டியல் விரைவில்
தயாரிக்கப்படும். ஆசிரியர்களின்
பயிற்சிக்குப் பின்னர்
அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளி மாணவ, மாணவிகள் பயிற்சி பெற
அழைக்கப்படுவர் எனக் கல்வித்
துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வருக்காகக் காத்திருப்பு: பணிகள்
முடிந்து அனைத்தும் தயார் நிலையில்
உள்ளன. காணொலிக் காட்சி வாயிலாக இந்த
ஆய்வகத்தைத் திறக்க முதல்வர்
தேதி வழங்கியவுடன் மையம்
திறக்கப்பட்டு பயிற்சி தொடங்கும் எனக்
கூறப்படுகிறது.

No comments:

Post a Comment