Thursday, August 28, 2014

2 மாதங்களுக்கு ஒருமுறைஆசிரியர் பணிபதிவேடு சரிபார்க்க தொடக்க கல்வித்துறை உத்தரவு.!!

ஆசிரியர்களின் பணி பதிவேடுகளை 2
மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து
உறுதி செய்யுமாறு தொடக்க
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக தொடக்க கல்வித்துறை இயக்குனர்
பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
உதவி, கூடுதல் உதவி தொடக்க
கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ்
பணிபுரியும் ஆசிரியர்களின்
பணி பதிவேடுகளை உரிய காலத்தில்
முறை யா க பதிவு செய்யப்பட்டுள்ளதை 2
மாதங்களுக்கு ஒரு முறை உறுதி செய்து
கொள்ள வேண்டும் ஆசிரியர்களின்
பணி பதிவேட்டில் அவர்கள் பயின்ற
உயர்கல்வி விவரங்களை பதிவு செய்யும்
முன்பு, உயர்கல்வி பயில
அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும்,
சான்றிதழ்கள் தற்காலிகமா?
நிரந்தரமானதா என்பதையும்சரி பார்க்க
வேண்டும். ஆசிரியர்களின் வளர் ஊதியம்,
பதவி உயர்வு ஊதியம் நிர்ணயம் மற்றும்
ஓய்வூதியம் அனைத்தும்
பணி பதிவேட்டில் உள்ள பதிவுகளின்
அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது.
எனவே ஒவ்வொரு உதவி, கூடுதல்
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்
தங்களின்கீழ் பணிபுரியும்
அனைத்து வகை ஆசிரியர்களின்
பணி பதிவேடுகளில் விவரங்கள்
விடுபட்டிருந்தால் 15 நாட்களுக்குள்
பதிவு செய்யவேண்டும். இவ்வாறுஅந்த
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment