Friday, August 08, 2014

தமிழகத்தில் 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி; மாநில செயலர் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார்
வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர்
மதுரையில் நேற்று நிருபர்களிடம்
கூறியதாவது:
மதுரையில் நாளை (9ம் தேதி)
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
மாநாடு நடைபெற உள்ளது. இதில்
தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
மாணவர்களின் வேலை, கல்வி தொடர்பான 58
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
தேர்ச்சி விகிதம் குறைந்தால்
ஆசிரியர்களுக்கு மெமோ வழங்குதல்,
சஸ்பெண்ட் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள்
எடுத்து வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள்
மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமாக
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின்
கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.
அவற்றை உடனே நிரப்ப வேண்டும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
பதவி உயர்வு குறித்து கருணாகரன்
தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன்
அறிக்கை அரசிடம் தாக்கல்
செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன்படி பதவி உயர்வு,
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஆசிரியர்கள் பாஸ்போர்ட் மற்றும் நிலம் வாங்க
வேண்டும் என்றால் கூட இயக்குநர்
அலுவலகத்தில் அனுமதி பெற
வேண்டியுள்ளது. இதனால் காலதாமதம்
ஏற்படுகிறது. அந்தந்த மாவட்ட
கல்வி அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்க
வேண்டும். பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த
திருச்சி, சென்னையில் மையம்
அமைக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment