Friday, August 01, 2014

தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் முதல்வர் அறிவிப்பு!

தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்: 
வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களுடைய குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்கும் வகையில், ரூ.50 ஆயிரம் வைப்பீடாக வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தத் தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையும் அதன் முதிர்வுத் தொகையும் மாணவ-மாணவியரின் கல்விச் செலவு, பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும். 

No comments:

Post a Comment