Thursday, August 28, 2014

அனைவருக்கும் கல்வி இயக்கம்: 60 ஆயிரம் கணிதப் பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கணிதப் பாட ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேருக்கு "அனைவருக்கும் கல்வி' இயக்கத்திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் 100-க்கும்
மேற்பட்ட கருத்தாளர்கள்
தேர்வு செய்யப்பட்டு சென்னையில்
திங்கள்கிழமை முதல் 2
நாள்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
முதல்கட்டமாக மாநில அளவிலும்,
அடுத்ததாக, மாவட்ட அளவிலும்
ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.
அதன்பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள 60
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணித
ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில்
பயிற்சி வழங்கப்படும் என்று அவர்கள்
தெரிவித்தனர்.
கணிதப் பாடத்தில் கடினப் பகுதிகளை
மாணவர்களுக்கு எவ்வாறு எளிமையாக
கற்பிப்பது, புதுமையான கற்பித்தல் முறைகள்
போன்றவை இந்தப் பயிற்சியில்
ஆசிரியர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது.
ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், கணித வல்லுநர்கள்
ஆகியோர் கருத்தாளர்களுக்கு திங்கள்கிழமை
வகுப்புகளை எடுத்தனர்.
பயிற்சியால் பாதிப்பா?
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்,
அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட
திட்டங்களின் கீழ்
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியால்
பள்ளியில் கற்றல், கற்பித்தல் பணிகள்
பாதிக்கப்படுவதாக தலைமையாசிரியர்கள்
புகார் கூறினர்.
இது தொடர்பாக பள்ளிக்
கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள்
கூறியதாவது:
பள்ளிகளில் கற்பித்தல், கற்றல்
பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்
ஆசிரியர்களை இரண்டு,
மூன்று குழுக்களாகப் பிரித்தே பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.
பள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாத
வகையில் கவனம்
எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இது போன்ற பயிற்சிகளின்
மூலமே புதுமையான கற்பித்தல்
முறைகளை ஆசிரியர்கள்
அறிந்துகொள்வதோடு, தங்களையும்
மேம்படுத்திக் கொள்ள முடியும்.
கல்வித் தரம் மேம்பட இதுபோன்ற பயிற்சிகள்
ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம் என
அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment