Monday, August 11, 2014

அரசுப் பள்ளியில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்தேர்வு

அரசு உயர்/மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இந்த அடைவுத்தேர்வினை மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் & அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாத இறுதியில் அடைவுத்தேர்வு நடக்க உள்ளதாகவும், அதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்பு/எழுதும் திறன், கணிதத்திறன் ஆகியன சோதிக்கப்படுவதாகவும், அச்சோதனை ஆசிரியர் பயிற்றுனர்கள் கொண்டு நடத்தப்படும் எனவும், ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 3 பள்ளிகள் வீதம் 413 ஒன்றியங்களில் நடைபெறும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment