Saturday, August 30, 2014

ஆபத்து! : அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும்... : மவுனம் சாதிக்கும் கல்வித்துறை

ஈரோடு: அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிந்தும், கல்வித்துறையினர் மவுனம் சாதித்து வருகின்றனர்.
ஈரோடு, பெரியார் வீதியில், அரசு துவக்க பள்ளி, பல ஆண்டுகளாக செயல்படுகிறது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான இங்கு, 250 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். ஓட்டு கட்டிடத்திலேயே, வகுப்பறைகள் நடக்கிறது.
இதுபற்றி பெற்றோர் கூறியதாவது: மங்களூர் ஓடுகளால், 1911ல் இப்பள்ளி கட்டப்பட்டது. 100 ஆண்டுக்கு மேல் பழமையானது. பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படுகிறது. ஓடுகளால் ஆன தாழ்வாரம், கரையான், அரித்து, கட்டிடத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகள் இடிந்து விழுந்து, சேதமடைந்துள்ளது.
இருமுறை கட்டிடத்தில் சேதம் ஏற்பட்ட போதும், பள்ளி விடுமுறையாக இருந்ததால், அசம்பாவிதம் நடக்கவில்லை. கடந்தாண்டை விட, 70 பேர் அதிகமாக, இந்தாண்டு சேர்ந்துள்ளனர். பழுதடைந்த கட்டிடத்தில்தான் ஆங்கில வழி வகுப்புகள், 1-ஏ, 1-பி, 2-ஏ, 2-பி, தமிழ் வழி வகுப்புகள் 1, 2ம் நடக்கிறது.
இக்கட்டிடத்தின் முன்புறம், மூன்று ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகங்கள் செயல்படுகிறது. இவை கான்கிரீட் கட்டிடத்தால் ஆனது. பழுதடைந்துள்ள ஓட்டு கட்டிடத்தை உடன் இடிக்க வேண்டும். வகுப்பறைகள் செயல்பட ஏதுவாக, இவ்விரு அலுவலகங்களையும், அங்கிருந்து மாற்ற வேண்டும்.
கன மழை, பலத்த காற்று வீசும் பட்சத்தில், ஓட்டு கட்டிடம் எப்போது வேண்டுமானாலும், விழக்கூடும். பாதுகாப்பற்ற கட்டிடத்தில் படிக்க, வேறு வழியின்றி குழந்தைகளை அனுப்புகிறோம், என்றனர். பள்ளி கட்டிட நிலை குறித்து, கிராம கல்வி குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, தலைமை ஆசிரியர் ஆகியோர், சி.இ.ஓ., டி.இ.ஓ., போன்றோரிடம் நேரிலும், பதிவு தபாலிலும் தெரிவித்துள்ளனர். இதுவரை கல்வி துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும், மவுனம் சாதிக்கிறது. கடந்த ஜூலை, 16ம் தேதி, பொதுப்பணித்துறை கட்டிட மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளர் நாகமாணிக்கம், நேரில் தள ஆய்வு செய்தார். ஆய்வறிக்கையில் கூறியதாவது:
மங்களூர் ஓடுகளுடன் கூடிய தாழ்வாரம், கரையானால் அரிக்கப்பட்டுள்ளது. பாதி ஓடுகள் விழுந்துள்ளது. கட்டிடத்தின் சுவர் பகுதிகளில், சிமெண்ட் பூச்சுகள் ஆ ங்காங்கே அரிக்கப்பட்டு, சி று விரிசல்கள் காணப்படுகின்றன. கூரைப்பகுதியின் மரக்கட்டைகள் கரையான்களால் அரிக்கப்பட்டு, வலுவிழந்து உள்ளது. மீதமுள்ள கூரையும் எந்த நேரத்திலும், இடிந்து விழும் அபாயம் உள்ளது. பள்ளி கட்டிடத்தின் தாழ்வார பகுதி, வலுவிழுந் து, பாதுகாப்பற்ற, அபாயகரமான நிலையில் உள்ளது. வகுப்பறை, அலுவலகம், வேறு எந்த பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்த கூடாது. பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள், இப்பகுதியில் நடமாடுவதை தடை செய்ய, ப ள்ளி நிர்வாகம் நடவடிக் கை எடுக்க வேண்டும். பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவுறுத்தலுக்கு பின்னரும், கண்டு கொள்ளாத கல்வி துறை அதிகாரிகள், அசம்பாவிதம் நடக்கும் முன் விழிக்க வேண்டும்.

No comments:

Post a Comment