Monday, August 11, 2014

இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் பாடங்களுக்கான தேர்வு பட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படும்

தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வாணையம் அதற்குரிய
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு
செய்துள்ளது.
ஏற்கனவே சில பாடங்களுக்கு உரிய
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன
பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று ஆங்கிலம், கணிதம், வேதியல், தாவரவியல், வரலாறு, மைக்ரோ பயாலஜி ஆகிய 6 பாடங்களுக்கு உரிய
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 1,326
பேர்களை ஆசிரியர் தேர்வு வாரியம்
தேர்ந்தெடுத்து அவர்களின்
பட்டியலை நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் (trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.
இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய 3 பாடங்களுக்கு உரிய
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படும். இந்த
தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுனய்யார், உறுப்பினர் அறிவொளி ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment