Sunday, August 24, 2014

தேவையில்லாமல் ஏற்படும் பணிநியமன காலதாமதம் ஆசிரியர்களிடையே ஒரு விரக்தி

மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் தவிர அனைத்து பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. மூன்று பாடங்களிலும் மொத்தமாக புதிதாக தேர்வானவர்கள் 49 பேர் மட்டுமே. புதிதாக தேர்வானவர்களுக்கு கடந்த 14 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பை விழுப்புரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்தது. அந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 10 நாட்கள் ஆகியும் இதுவரை மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்.

செப்டம்பர் மாதத்தில் காலாண்டுத் தேர்வு தொடங்கும் நிலையில், தேர்வுக்கு முன்னதாகவே முதுகலை ஆசிரியர் நியமனம் இருந்தால் நல்லது. அப்போது தான் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படும். காலாண்டு தேர்வு முடிந்ததும் வகுப்பறையில் பாடம் கற்பிக்க மற்றும் கற்க அப்புரிந்துணர்வு பலமாக இருக்கும்.
தேவையில்லாமல் ஏற்படும் பணிநியமன காலதாமதம் ஆசிரியரிடையே ஒரு விரக்தியையும், மாணவர்களுக்கு ஆசிரியர் இன்றி பாடம் கற்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

No comments:

Post a Comment