Saturday, August 16, 2014

தமிழகத்தில் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுமா?

தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது.

எனவே இப்பள்ளிகளை கல்வித் துறையின் கீழ்தனிப்பிரிவாக
கொண்டு வந்து நிர்வகித்து தரம்
உயர்த்தப்பட வேண்டும் என சமூகஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின்
கீழ் 997 தொடக்கப்பள்ளிகளும், 63
நடுநிலைப்பள்ளிகளும், 133 உயர்நிலைப்பள்ளிகளும், 100
மேல்நிலைப்பள்ளிகளும், 1300-க்கும் மேற்பட்ட விடுதிகளும்
இயங்கி வருகின்றனர். இவைகள் அனைத்தையும்
மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மற்றும்
வட்டாட்சியர்கள்
மேற்பார்வையிட்டு நடத்தி வருகின்றனர். மேற்கண்ட
ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள், அரசின்
நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு கொண்டு
செல்லும் பணிகள் உள்ளதால், போதிய நேரம்
இல்லாததால் ஆதிதிராவிட
நலத்துறை பள்ளிகளை ஆய்வு செய்து, நிர்வகிக்க
இயலவில்லை. இதனால் ஆதிதிராவிட
நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நிர்வாக
சீர்கேடு ஏற்பட்டு கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது.
பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சிதம்பரம் வட்டாட்சியர் (ஆதிதிராவிடர்
நலத்துறை) அலுவலகத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பணம்
கையாடல்
செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு கடலூர்
மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்
பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக
வட்டாட்சியர்கள், அலுவலக உதவியாளர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிதிராவிடநலத்துறையின் கீழ்
செயல்படும்
பள்ளி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும்
சோப், படுக்கை உள்ளிட்ட பொருள்கள்
வழங்கப்படாமலேயே பல்வேறு முறைகேடுகள்
நடைபெற்று வருகிறது. மேலும் இத்துறையில்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அரசு விதிப்படி உரிய
இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம்
செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் போதுமான அளவில் மேல்நிலைப்பள்ளிகள்
இல்லாத காரணத்தாலும், போதிய
பணி இடங்கள் உருவாக்கப்படாத
காரணத்தாலும் ஏறத்தாழ 25 ஆண்டுகள்
வரை பதவி உயர்வு இல்லாமல் ஒரே நிலையில்
முதுகலை பட்டதாரி ஆசிரியராகவே பணியாற்றும்
நிலை உள்ளது.
எனவே ஆதிதிராவிட நலத்துறை கீழ் இயங்கும்
பள்ளிகளை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும்
கல்வித்துறையின் கீழ்
கொண்டு வந்து தனியாக மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர்,
மாவட்டக்கல்வி அலுவலர்,
உதவிக்கல்வி அலுவவலர் ஆகியோரை மாவட்டம் தோறும்
நியமிக்க வேண்டும். மாவட்டம் தோறும்
அமைக்காவிட்டாலும், 8 மண்டலங்களாக
பிரித்து மண்டல உதவி இயக்குநர்
பதவியை உருவாக்கி கல்வி அலுவலர்களை நியமிக்க
வேண்டும் என சமூக ஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment