Sunday, August 03, 2014

தமிழக அரசின்அனுமதி கிடைத்ததும்,உடனடியாக ஆசிரியர்தேர்வு பட்டியல்வெளியிடப்படும்

11 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே,
டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார்.
பின், ஏற்கனவே அறிவித்த
தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப்
போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம்
தெரிவித்தது.
தவம்:டி.ஆர்.பி.,யின், இந்த தொடர்
அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள்
மத்தியில், பெரும் பரபரப்பும்,
எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. 'நாம்
தேர்வு பெறுவோமா?' என,
ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும்,
www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி.,
இணையதளத்தை பார்த்தபடி
காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக.,
1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என,
டி.ஆர்.பி., வட்டாரம் உறுதியாக
தெரிவித்தது. இதனால்,
நேற்று முன்தினம் காலை முதல்
நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன்,
தேர்வர்கள் தவம் இருந்தனர்.ஆனால்,
கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி.,
வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த
சொதப்பல் காரணமாக, தேர்வர்கள்
ஏமாற்றமும், அதிருப்தியும்
அடைந்துள்ளனர்.
எதிர்பார்ப்பு:பட்டியல்
வெளியாகாதது குறித்து, டி.ஆர்.பி.,
வட்டாரம் கூறியதாவது:பட்டியலை,
தயாரித்து முடித்துவிட்டோம்.
கடைசி நேரத்தில், 'மேனுவலாக'
தேர்வு பட்டியலை சரிபார்க்க
முடிவு செய்தோம். அதன்படி,
ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும்,
ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர்.
பட்டியல் வெளியாகும்
தேதி தள்ளிப்போனதற்கு, இது தான்
காரணம்.மேலும்,
முடிவை வெளியிடுவதற்கு, தமிழக
அரசிடம்
இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம்
தேதிக்குள் (நாளை), அரசின்
அனுமதி கிடைத்துவிடும் என,
எதிர்பார்க்கிறோம்.
அனுமதி கிடைத்ததும், உடனடியாக
தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம்
தெரிவித்தது.

No comments:

Post a Comment