Saturday, August 16, 2014

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புதிய
திட்டம் சிறப்பு வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டு கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேட்டி
திருச்சி மாவட்டத்தில் உள்ள
அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி.
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்
தொடங்கப்பட்டுள்ளது என்று சிறப்பு வழிகாட்டி புத்தகத்தை
வெளியிட்டு, கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் கூறினார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன்
நிருபர்களிடம் கூறியதாவது:–
எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெற திருச்சி மாவட்டத்தில்
கடந்த 2013–14–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.யில்
மாணவ–மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.45 ஆக
உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 3.29 சதவீதம்
குறைவு ஆகும். குறிப்பாக அரசு பள்ளிகளில்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதம் மிகவும்
குறைந்து உள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 169
அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த
பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை 13
ஆயிரத்து 790 பேர் எழுதினர். இவர்களில் 12
ஆயிரத்து 253 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன்
தேர்ச்சி விழுக்காடு 88.85 மட்டுமே ஆகும்.
எஸ்.எஸ்.எல்.சி.யில் மாணவ–மாணவிகளின்
தேர்ச்சி விகிதம் குறைவதால், இடைநிற்றலும் அதிரிக்கிறது.
ஆகவே இதனை தடுக்கும் பொருட்டு, கற்கும் திறன் குறைந்த
மாணவ–மாணவிகளை எஸ்.எஸ்.எல்.சி.யில்
குறைந்தபட்சம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற
நோக்கத்தில், இந்த ஆண்டு சிறப்பு வழிகாட்டி புத்தகம்
தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் கற்கும் திறன்
குறைந்த மாணவ–மாணவிகளை கண்டறிந்து,
அவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். முதல் கட்டமாக
அரசு பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரம் மாணவ–
மாணவிகளுக்கு மட்டும் இந்த புத்தகம் வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த திட்டம்
தேவைப்பட்டால், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும்
விரிவுப்படுத்தப்படும். அனுபவம் வாய்ந்த
ஆசிரியர்கள் தயாரித்தனர் தனியார் பள்ளிகளில்
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்படும்
சிறப்பு பயிற்சிக்கு ஏற்ப, இந்த வழிகாட்டி புத்தகத்தில்
முக்கியமான கேள்விகள், அதாவது பொதுத்தேர்வில்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இடம்
பெற்று இருக்கும். இந்த புத்தகத்தை படிக்கும்
மாணவர்கள் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில்
தேர்ச்சி பெற்றுவிடலாம். நன்றாக படித்து மாவட்ட, மாநில,
பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ–
மாணவிகளுக்கு இந்த புத்தகம் வழங்கப்பட மாட்டாது.
இந்த சிறப்பு வழிகாட்டி புத்தகம் தமிழ், ஆங்கிலம்,
கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் என பாடவாரியாக
தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் 5
அனுபவம் வாய்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் சேர்ந்து,
புத்தகத்தை உருவாக்கி உள்ளனர். இதனை தயாரித்ததில்
தனியார் ஆசிரியர்களின் பங்களிப்பும் உள்ளது.
மேலும், இந்த புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள
வினா மற்றும் விடைகள் குறித்து அந்தந்த பள்ளிகளில்
மாதந்தோறும் சிறப்பு தேர்வும் நடத்தப்படும். இது தவிர,
ஒவ்வொரு பாடம்வாரியாக ஆசிரியர்களுக்கும்
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு வழிகாட்டி வெளியீடு திருச்சி மாவட்டத்தில் உள்ள
அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி உள்ளது.
குறிப்பிட்ட 4 அல்லது 5 பள்ளிகளில் தான் வசதிகள்
குறைவாக இருக்கிறது.
இது பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை என்ற
விகிதாச்சாரத்தின்படி அமைத்து இருக்க வேண்டும்.
இது குறித்து ஆய்வு நடத்தவும்
உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ–
மாணவிகளுக்காக தயாரிக்கப்பட்ட
சிறப்பு வழிகாட்டி புத்தகத்தை கலெக்டர்
ஜெயஸ்ரீமுரளிதரன் வெளியிட்டார். அப்போது மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி மற்றும்
கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment