Saturday, August 16, 2014

தமிழகம் கல்வியில் தன்னிறைவு பெற்றுள்ளது: சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்

தமிழகம் தொடக்கக் கல்வி, மேல்நிலைக் கல்வியில் தன்னிறைவு பெற்றுள்ளது
என சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் பொங்க கூறினார். 68-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை புனித ஜார்ஜ்கோட்டைக் கொத்தளத்தில், தமிழக முதல்வர்
ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றினார். முப்படைகளின்
அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
கொடி ஏற்றிய பிறகு உரையாற்றிய முதல்வர்:
மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்ததோடு,
கல்விக்கு மிக உயரிய முக்கியத்துவத்தை அளித்து,
கல்வியில்
ஒரு புரட்சியையே தமிழகஅரசு ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக, இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம்
தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலைக்
கல்வி வரை தன்னிறைவுபெற்றுள்ளது என பெருமிதம்
தெரிவித்தார். ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும் என்றால்,
இது போன்ற வறுமை ஒழிப்பு திட்டங்கள் மட்டும் போதாது.
அவர்கள் கல்வி கற்றவர்களாக திகழும் போது தான்
பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெற முடியும் என்பதால்
தான்; கல்விக்கு மிக உயரிய முக்கியத்துவத்தை அளித்து,
கல்வியில் ஒரு புரட்சியையே அரசு ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக, இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம்
தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலைக்
கல்வி வரை தன்னிறைவுபெற்றுள்ளது. இரு விரல்
கொண்டு எழுதியவர்கள் இன்று பத்து விரல்
கொண்டு கணினியில் எழுதுகிறார்கள். பள்ளிக் கல்வித்
துறைக்கு மட்டும் இந்த நிதியாண்டில் 19 ஆயிரத்து 634
கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதிலிருந்தே;
கல்வியில் எந்த அளவுக்கு அரசு கவனம்
செலுத்துகிறது என்பதை நீங்கள்
தெரிந்து கொள்ளலாம்."யாவரும் தேர்ந்த கல்வி ஞானம்
எய்தி வாழ்வோம் இந்த நாட்டிலே" என்று சுதந்திர
இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பாரதியின்
கனவு இன்று நனவாகியுள்ளது.

No comments:

Post a Comment