Sunday, August 24, 2014

கவுன்சலிங்கில் மறைக்கப்பட்ட இடங்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் இடமாற்ற உத்தரவு

தமிழகத்தில் நடந்த கலந்தாய்வில்
ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் இடங்கள் மறைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான
ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம்
இடைநிலை, பட்டதாரி மற்றும்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும்
தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட
மாறுதல் கலந்தாய்வு நடந்தது.இதில்
தென்மாவட்ட பள்ளிகளில் உள்ள
காலியிடங்களுக்கு நடந்த கலந்தாய்வில்
ஏராளமான ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும்
தலைமையாசிரியர்கள் தாங்கள்வசிக்கும்
பகுதிகளுக்கு மாறுதல் கோரினர். ஆனால்,
கலந்தாய்வில் முக்கிய பள்ளிகளில் உள்ள
ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்
காலியிடங்கள் மறைக்கப்பட்டதால், ஆங்
காங்கே ஆசிரியர்கள் சங்கம் சார்பில்
ஆர்ப்பாட்டங்கள்
நடத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தின்போது,
ஏற்கனவே தென் மாவட்டங்களில் உள்ள
அனைத்து பள்ளிகளின்
காலி பணியிடங்களின்
பட்டியலை உடனடியாக வெளியிடக்
கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில்,
தென்மாவட்டங்களில் நடந்த கலந்தாய்வின்போது,
மறைக்கப்பட்ட
காலி பணி யிடங்களுக்கு பள்ளி
கல்வித்துறை சார்பில், நிர்வாக மாறுதல்
எனும் பெயரில் பணம்
பெற்றுக்கொண்டு நிரப்பப்பட்டு வருவதாக
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.பணம் கொடுத்து மாறுதல்
பெற்று செல்பவர்களும் ஆசிரியர்கள்.
பணியிடம்மறைக்கப்பட்டதால்
பாதிக்கப்பட்டோரும் ஆசிரியர்கள் தான்.
இதனால், ஆசிரியர்கள் மற்றும்
தலைமையாசிரியர்களின் பணியிட மாறுதல்
பிரச்னையில் என்ன முடிவு எடுப்பது என
தெரியாமல் ஆசிரியர் சங்கங்கள்குழப்பம்
அடைந்து உள்ளன.பொருளாதார வசதியற்ற
ஆசிரியர்கள் மற்றும் லஞ்சம் அளிக்க
விரும்பாத ஆசிரியர்கள், தாங்கள் விரும்பும்
பகுதியில் பணியாற்ற முடியாமல் மன
உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால்,
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீண்ட தொலைவில்
உள்ள பள்ளிகளில் தொடர்ந்து பணியாற்றும்
பரிதாப சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
இவர்கள் காலிப் பணியிடங்களின்
பட்டியலை வெளிப்படையாக அறிவிக்காததால்
செய்வதறியாது, மனவேதனையில்
பணியாற்றி வருகின்றனர்.
எனவே, தமிழகத்தில் உள்ள
அனைத்து பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர்
மற்றும் தலைமையாசிரியர் பணியிடங்களின்
பட்டியலை வெளியிட்டு, மீண்டும்
கலந்தாய்வு நடத்தி, ஆசிரியர்கள் விரும்பிய
இடங்களில் பணியமர்த்த தமிழக
அரசு உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட
ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment