Thursday, September 25, 2014

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 80 இடங்களை காலியாக வைக்க கோர்ட் உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்
பணிக்குச் சேர ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும்.
இந்த
தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல்
மார்க் எடுத்தால் வெற்றி என்ற
நிலைமை இருந்தது. இதற்குப் பதிலாக
வெயிட்டேஜ் என்ற
முறையை பயன்படுத்தி ஆசிரியர்கள்
தேர்வு நடைபெறும் என்று தமிழக
அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில்
ஆசிரியர்கள் பணி நியமனமும்
நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி
ஆசிரியர்கள் தொடர் போராட்டம்
நடத்தி வருகின்றனர். இந்நிலையில்
புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசன்
உள்பட 73 பேர் வெயிட்டேஜ் முறையை 73
பேர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக
தொடர்ந்த வழக்கில் 80
பணியிடங்களை காலியாக
வைத்து விட்டு
மற்ற பணியிடங்களை நிரப்பிக்கொள்ள
அனுமதி அளித்து உயர்நீதிமன்றம்
உத்தரவு. மேலும் வழக்கு வரும்
அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
இதனால் பணிநியமத்திற்கு இருந்த
அனைத்து தடைகளும் விலகியது.

No comments:

Post a Comment