Wednesday, September 17, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த விவாதங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த விவாதங்கள் அனைத்தும் முடிந்தது.விவாதம் குறித்த அடிப்ப்டையான தகவலை முந்தைய பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.  மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதங்கள் காரசாரமாகத் தொடங்கியது.

விவாதத்தின் போது

1) CBSC,STATE BOARD போன்ற பல்வேறு படத்திட்டத்தின் மூலம் படித்து வருபவர்களை weightage முறையில் ஒரே மாதிரி கணக்கில் கொண்டு மதிப்பிடுவது தவறு.

2) 5% தளர்வு என்பது அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்டது.

3) Weightage கணக்கிடும் பொழுது அடிப்படை கல்வித் தகுதி என்னவோ அதிலிருந்து அதற்கு மேற்பட்டத் தகுதியைத்தான் கணக்கிட வேண்டுமோ தவிர அதற்கு கீழான உள்ள கல்வித் தகுதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.அதாவது BT ஆசிரியராக பணியாற்ற UG+B.ed என்றால் அதற்கு மேலாக உள்ள M.sc,M.ed போன்றவற்றைதான் கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர +12,UG போன்றவற்றை கணக்கில் கொள்ள கூடாது..

A) மற்ற தகுதிகான் முறையில் எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அதே போல்தான் இதிலும் எடுத்துக்கொள்ளப்ப்டுகிறது.

B) 5% தளர்வு வழங்குவது என்பது அரசின் கொள்கைக்கு உட்பட்டது.


C) எந்த weightage முறையையும் நாங்களாக கொண்டு வரவில்லை.நீதிமன்றத்தின் சார்பாக நீதிபதி மாண்புமிகு திரு.நாகமுத்து அவர்கள் எதை பரிந்துரை செய்தாரோ அதையேத்தான் அரசும் TRB யும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

D) மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி திரு,சசிதரன் அவர்கள் இடைக்காலத்தடை வழங்கியுள்ளதை நீதிபதிகளின் கவனத்திற்கு AG அவர்கள் கொண்டு சென்றார்.

E) அரசு பள்ளியில் பயிலும் மானவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாண்புமிகு நீதிபதி தீர்ப்பினை வழங்கிட வேண்டும்.

ஏதேனும் கருத்தை சேர்க்க வேண்டுமென்று இருதரப்பு வழக்குரைஞ்சர்களும் விரும்பினால் இந்த வார இறுதிக்குள் எழுத்துப்பூர்வமாக வழங்கிட வேண்டுமென்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Conclusion
1)5% தளர்வு எந்த நிலையிலும் ரத்து செய்யப்பட மாட்டாது.

2)பதிவு மூப்பு,பனியனுபவம் போன்றவற்றிற்கு மதிப்பெண் அளிக்கப்பட மாட்டாது.

3)வழக்கு தொடுத்த நபர்களிடம் அவ்வழக்கினை எடுத்து வாதாடிய வழக்குரைஞ்சர் ஒருவர் G.O இல் சிறிய மாற்றம் வரலாம் என்று ஆறுதலாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.இது ஒவ்வொரு வழக்குரைஞரும் தன்னுடைய மனுதாரருக்கு வாடிக்கையாக சொல்வதுதான்.

சரி ஒருவேளை நன்றாக கவனியுங்கள் ஒருவேளைதான்(suppose) G.O 71. மாறினால் எப்படி மாறும்?

TET மதிப்பெண்ணிற்கு 60% என்பதற்கு பதிலாக 60% க்கு அதிகமாக கொடுக்கப்படலாம்.அல்லது +12 மதிப்பெண் நீக்கப்படலாம்.

ஆனால் எதுவானாலும் நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகுதான் மாற்றம் வருமா என்பது தெரிய வரும்.

ஏற்கனவே ஓராண்டு காலத்திற்கு மேலாக காலதாமதம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் weightage முறையில் மாற்றம் வராது என எதிர்பார்க்கலாம்.

அரசு தரப்பில் வாதாடிய AG அவர்கள் மாணவர்கள் நலன் கருதி மாண்புமிகு நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடுத்த வாரத்தின் இருத்திக்குள் எதிர்பார்க்கலாம்.

TET குறித்த பெரும் வழக்குகளான 5% தளர்வு மற்றும் G.O 71 க்கு எதிராக இனிமேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது.. இனி வழக்குத் தொடர வேண்டுமானால் உச்சநீதிமன்றம் மட்டுமே மிச்சம்...........


"weightage முறையில் மாற்றம் கொண்டு வரலாம், ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயப்படுத்தாது"  என்று மாண்புமிகு நீதிபதி கூறியிருப்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment