Monday, September 15, 2014

காலியிடத்திற்கு ஏற்ப ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழக அரசு காலியாக உள்ள
ஆசிரியர் பணியிடங்களுக்கு
ஏற்றவாறு, ஆசிரியர்களை தேர்வு
செய்யவேண்டும் என ஆயக்குடி
இலவச பயிற்சி மைய மாணவர்கள்
கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 2012 ல் ஆசிரியர்
தகுதித் தேர்வு நடைபெற்றது.
அதில் 19 ஆயிரம் பேர்
வெற்றிபெற்றனர். அப்போதிருந்த
காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இந்நிலையில் 2013 ல் நடந்த டி.இ.டி
., தேர்வில் 27 ஆயிரம் பேர்
வெற்றி பெற்றனர். அரசு,
மதிப்பெண் சலுகை
வழங்கியதால், அது 45 ஆயிரமாக
மாறியது. தற்சமயம் மொத்தம் 72
ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி
தேர்வில் வெற்றிபெற்று
பணிக்காக காத்திருக்கின்றனர்.
இவர்களுக்கு வெயிட்டேஜ்
முறையில் பணி
வழங்கப்படுகிறது. இது
ஒருசாராருக்கு
சாதகமாகவும்,மற்றவர்களுக்கு
பாதகமாகவும் உள்ளதாக
மாணவர்கள் கருதுகின்றனர்.
ஆகையால், ஆசிரியர் தகுதித்
தேர்வு தாள்-1, தாள்-2,
ஆகியவற்றில் வினாக்களின்
எண்ணிக்கையை அதிகரித்து,
தேர்வு நடத்த வேண்டும். மற்ற
போட்டிதேர்வுகளைப் போல காலி
பணியிடங்களுக்கு ஏற்ப முதலிடம்
பெறுபவர்களுக்கு மட்டும்
வாய்ப்பு அளிக்க தமிழக அரசு
முன்வர
வேண்டும் என ஆயக்குடி இலவச
பயிற்சி மைய மாணவர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment