Friday, September 26, 2014

தூய்மையான இந்தியா திட்டத்தில் மாணவர்கள்: யு.ஜி.சி., அறிவுறுத்தல்

'மத்திய அரசின், 'தூய்மையான
இந்தியா' திட்டத்தை, உயர்கல்வி நிறுவனங்கள், இன்று முதல் செயல்படுத்த
வேண்டும்' என, அனைத்து பல்கலைகள்,
கல்லூரிகளுக்கு, பல்கலை மானியக்
குழு (யு.ஜி.சி.,) அறிவுறுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர
மோடி, சுதந்திர தின விழாவின் போது,
'ஸ்வச்சா பாரத் அபியான்' என்ற, 'தூய்மையான
இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.மத்திய
மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர்,
இத்திட்டத்தை, கல்லூரிகள், பல்கலைகள் உள்ளிட்ட
உயர்கல்வி நிறுவனங்களிலும்
செயல்படுத்தும்படி,
தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,
அவர் அனுப்பியுள்ள கடிதம்:திட்டத்தை, அக்., 2ம்
தேதி துவக்க வேண்டும்; பொது சுகாதாரம்
மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில்,
விவாதம், கட்டுரைப் போட்டி, புகைப்பட
கண்காட்சியை நடத்த வேண்டும்.கல்வி நிறுவனங்கள்
மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள பகுதிகளில்,
என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள், தெருக்களைசுத்தப்படுத்துவதுடன்,
பொது சுகாதாரம் குறித்து,
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில்
கூறப்பட்டுள்ளது.இந்த கடிதப்படி,
உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்
என, யு.ஜி.சி.,யும் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment