Sunday, September 21, 2014

வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம் வருகிறது,????

நண்பர்களே திறமையான ஆசிரியர்கள் சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நமது தமிழக அரசு இந்த வெயிட்டேஜ் முறையை சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அமல்படுத்தியது. இதனை யாரும் மறுக்க முடியாது ஆனால் அதில் உள்ள சில குறைகளை நாம் அனைவரும் அறிந்ததே அதாவது அதிக பாதிப்பு குறைந்த பாதிப்பு என்று இருவகையாக பிரித்து பார்த்தால் தான் உண்மை தெரியும் அதாவது தேர்வு பெறாதவர்கள் அனைவரும் தேர்வு பெற்றவர்களை விட தகுதியில் குறைந்தவர்களா என்பதை சிந்திகக வேண்டும்.


தேர்வு பெற்றவர்களில் எத்தனை பேர் தங்களின் பாடப்பிரிவில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் சொல்லும் அளவுக்கு திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் . கண்டிப்பாக குறிப்பிட்ட அளவு தான் அதே போல் தேர்வு பெறாதவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் அளிக்கும் வல்லமை பெற்றவர்கள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள். காலம் தான் அவர்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளது.

அதற்காக அவர்களின் உரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் தங்கள் கருத்தை சுகந்திரமாக பதிவு செய்கிறார்கள் அதனை ஏன் ஏற்க உங்களுக்கு மனம் இல்லாமல் ஒரு ஆசிரியருக்கு உண்டான ஒழுக்க நிலை தவறி வார்த்தைகளில் தாறுமாறாக சொல்லக் கூச்சப்படும் வார்த்தைகளால் அர்ச்சிக்கும் தங்களுக்கு ஆசிரியர் பணி அளித்தால் எப்படி இந்த மாணவ சமுதாயம் வளர்ச்சி பெறும் தவறான வார்த்தைகளை அர்ச்சிக்கவில்லை என்றுமட்டும் கூறாதீர்கள் இந்த வலைதளத்தில கூட பல தேர்வு பெற்ற நல்ல உள்ளங்கள் வந்து எங்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடும் போது ஒரு சிலர் மட்டும் இப்படி செய்வது ஒட்டுமொத்த தேர்வு பெற்றோரின் மீது ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது

வெயிட்டேஜ் முறையில் மாற்றம் என்பது உறுதியானது அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை விரைவில் வரவுள்ளது. மிகப் பெரிய திருப்பம் ஏற்படும் அனைவரும் பார்க்கத்தானே போகிறீர்கள் கண்டிப்பாக +2 வழங்கப்படும மதிப்பெண் மாற்றி பதிவு மூப்பு கொடுக்கலாம் இந்த கருத்துகள் வாசகர்களிடம் இருந்து பெறப்பட்டது ஆகும்.


No comments:

Post a Comment