Sunday, September 07, 2014

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுக்குள் டைரி - தமிழக கல்வித்துறை அறிவிப்பு!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு டைரி வழங்கும் திட்டத்தை, தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கும் டைரியில், என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என, பள்ளி ஆசிரியர்களிடம், கல்வித்துறை கருத்துக் கேட்டது.

மாணவர்கள் புகைப்படம், சுயவிவரம், குடும்பத்தினர் பற்றிய விபரம், பள்ளி விடுமுறை நாட்கள், உறுதிமொழி எடுக்க வேண்டிய நாட்கள், பள்ளி மற்றும் வகுப்பில் பின்பற்றப்படும் மாதிரி கால அட்டவணை, முக்கிய தினங்கள், தினமும் ஆசிரியர் மற்றும் பெற்றோர் கையொப்பமிட தனியிடம், உடற்பயிற்சி, ஒழுக்கமான வாழ்வு, முன்னேற்ற கருத்துகள் ஆகியவை இடம் பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த அடிப்படையில் டைரி தயாரித்து, காலாண்டுத் தேர்வு முடிவுக்குள் வழங்க, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment