Friday, September 26, 2014

அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழாவிற்காக காலாண்டு தேர்வு காலையில் ரத்து! அமைச்சர் சென்ற பிறகு இசைக்கப்பட்டது தேசிய கீதம்

மணலி புதுநகர்
ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில், இலவச மடிக்கணினி வழங்கும் விழாவிற்கு அமைச்சர், எம்.எல்.ஏ., ஆகியோர், இரண்டு மணிநேரம் தாமதமாக வந்தனர்.
அதனால்,
6, 8, 10, பிளஸ் 2 ஆகிய
வகுப்புகளுக்கு, காலையில் நடைபெற வேண்டிய
காலாண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மணலி புதுநகர் ஜெய்கோபால்
கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில், படித்து முடித்த,
பிளஸ் 2 மாணவ, மாணவியர் 200 பேருக்கு,
இலவச மடிக்கணினிகளும், பிளஸ் 1 மாணவ,
மாணவியர், 172 பேருக்கு, இலவச சைக்கிள்களும்
வழங்கும் விழா, பொன்னேரி எம்.எல்.ஏ.,
பொன்.ராஜா தலைமையில், பால்வளத்
துறை அமைச்சர் ரமணா, காலை 10:00
மணிக்கு வழங்குவதாக அழைப்பிதழில்
தெரிவிக்கப்பட்டது. அதனால்,
நேற்று காலை 9:௦௦ மணி முதலே, அனைத்து மாணவ,
மாணவியர், ஆசிரியர்கள், விழா நடக்கும்
பள்ளி மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர்.
விடாத பேச்சு : மேலும், நேற்று காலை 10:௦௦
மணிக்கு நடைபெற வேண்டிய 6, 8, 10, பிளஸ் 2,
ஆகிய வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வும்
நடக்கவில்லை. காலை 9:00 மணியிலிருந்து மாணவ,
மாணவியர், ஆசிரியர்கள் ஆகியோர் அமைச்சர்,
எம்.எல்.ஏ.,வுக்காக
காத்திருந்தனர்.ஒருவழியாக, விழா நண்பகல்
12:00 மணிக்கு துவங்கியது. பள்ளியில்
காலாண்டுத் தேர்வு நடப்பது கூட
தெரியாமல், ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள்,
பெற்றோர் -- ஆசிரியர் கழக நிர்வாகிகள்,
தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர்.
பிற்பகல் 1:௦௦ மணிக்கு, அமைச்சர்
ரமணா பேசி முடித்து, மாணவ,
மாணவியருக்கு இலவச மடிக்கணினிகள், இலவச
சைக்கிள்களை வழங்கினார்.அதன்பின், அமைச்சர்,
எம்.எல்.ஏ., ஆகியோர் காரில்
ஏறி புறப்பட்டு சென்றனர். அவர்கள்
சென்ற சில நிமிடங்களுக்கு பின், தேசிய கீதம்
இசைக்கப்பட்டது.
என்ன சொல்கின்றனர் : பள்ளித்
தலைமை ஆசிரியர் ரவி கூறுகையில், ''பிளஸ் 2 மாணவ,
மாணவியருக்கு, நேற்று வேதியியல் மற்றும்
கணக்கியல் பாடப்பிரிவுகளுக்கான
காலாண்டுத் தேர்வை, தனி அறையில் நடத்திவிட்டோம்.
மற்ற வகுப்புகளுக்கான தேர்வு, இன்று (நேற்று)
மதியத்திற்கு மேல் நடத்தப்படும்,''
என்றார்.பள்ளியில் படிக்கும் பிளஸ் 2
மாணவர்கள் கூறுகையில்,'விழா நடப்பதால்,
காலை 10:00 மணிக்கு துவங்க வேண்டிய வேதியியல்,
கணக்கியல் பாடத்திற்கான
தேர்வு நடைபெறவில்லை. பிற்பகலுக்கு பின்
தேர்வு எழுத போகிறோம்' என்றனர்.

No comments:

Post a Comment