Tuesday, November 11, 2014

பள்ளிகளில் கழிப்பறை வசதி கல்வித்துறை இயக்குனர் அதிரடி

கழிப்பறை இல்லாத பள்ளிகளில் உடனடியாக கழிப்பறை கட்ட பள்ளி கல்வித்துறை இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள
அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை,
தண்ணீர் வசதி மற்றும் பராமரிப்பு பணிகள்
செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக,
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்
கழிப்பறை இல்லாத பள்ளிகள் பல உள்ளன.
இது தொடர்பாக,
பள்ளி கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர
முருகன் அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்களுடன்
ஆய்வு நடத்தினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிதி மற்றும்
கலெக்டர் விருப்ப நிதி மூலம்,
அனைத்து மாவட்டங்களிலும்
கழிப்பறை இல்லாத பள்ளிகளில் உடனடியாக
கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் கழிப்பறைகளுக்கு தண்ணீர்
வசதியை உறுதி செய்து, அவற்றை முறையாக
பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று அவர் உத்தரவிட்டார். விருதுநகர்
மாவட்டத்தில் கழிப்பறை இல்லாத 23
பள்ளிகளில் ஊரக
வளர்ச்சி முகமை நிதி மூலம், உடனடியாக
கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என
கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment