Tuesday, December 02, 2014

புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமனம்: ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர்
பதவியிலிருந்து மோகன் வர்கீஸ் சுங்கத்
மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது மின்வாரியத்
தலைவராக பதவி வகிக்கும்
கே ஞானதேசிகன்புதிய தலைமைச்
செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில், மோகன் வர்கீஸ் சுங்கத்
மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக
கே ஞானதேசிகன் நியமிக்கப்பட்டிருப்பதாக
கூறப்பட்டுள்ளது. ஊழல்
கண்காணிப்பு துறை மற்றும் நிர்வாக
சீர்திருத்தத்துறை ஆணையராகவும்
ஞானதேசிகன் கூடுதல் பொறுப்பு வகிப்பார்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகன்
வர்கீஸ் சுங்கத், தமிழக அரசின் ஐஏஎஸ்
பயிற்சி மையமான அண்ணா மேலாண்மைப்
பயிற்சி மையத்தின் இயக்குநராக
நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலராக
அறிவிக்கப்பட்டுள்ள கே.ஞானதேசிகன்,
தமிழ்நாடு மின்வாரியம், மற்றும்
மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்
தலைவர் மற்றும் நிர்வாக
இயக்குநராகஇருக்கிறார்.
பொதுப்பணித்துறையின் முதன்மைச்
செயலரான சாய்குமார்,
தமிழ்நாடு மின்வாரியம்,
மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்
தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரசு ஐஏஎஸ் அகாதமிக்கு இயக்குநராக உள்ள
இறையன்பு, பொருளாதாரம், புள்ளியியல்
துறை இயக்குநராக மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.
வருவாய்த்துறை முதன்மைச் செயலராக உள்ள
ககன்தீப்சிங் பேடி, ஊரக மேம்பாடு மற்றும்
உள்ளாட்சித்துறையின் செயலராக
மாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment