Saturday, December 06, 2014

அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற பயிற்சி: விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடு

அரசு பொது தேர்வில் விருதுநகர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் மாநில முதலிடம் பிடிக்க நன்கு படிக்கும் மாணவர்களை கண்டறிந்து வாரத்தில் இரு நாள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் விருதுநகர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் மாநில முதலிடம் பிடிக்க, சனி, ஞாயிறு கிழமைகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. பள்ளி வாரியாக அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அனுபவம் வாய்ந்த மூத்த ஆசிரியர்களால் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில், " தேர்வு மாணவர்களுக்கு கடினமான வினாக்கள் கேட்கப்பட்டு மாதிரி தேர்வுகள் நடத்துகிறோம். பள்ளி முடிந்து இரவு, காலை நேரத்தில் எந்த பாடத்தை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதை அட்டவணை படுத்தி கொடுக்கிறோம். இதன் மூலம் விருதுநகர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடிப்பர்,” என்றார்

No comments:

Post a Comment