Wednesday, February 11, 2015

வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு,
வி.முருகையா உள்பட அய்ந்து பேர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில், நாங்கள்
2006-2008-ஆம் ஆண்டு ஆசிரியர்
பயிற்சி படிப்பு முடித்தோம்.
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள்
பணி நியமனம் வேலை வாய்ப்பு அலுவலகங்களின்
பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது.
இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய்
கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.
இந்த விதி அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே,
இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என
அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.
இந்த மனுவை விசாரணை செய்த
தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் அய்ந்து பேரும்
மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்
முறையீட்டு மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்த குமார்,
பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய
அமர்வு விசாரித்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப்
பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில்,
வேலை வாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்புப்
பட்டியல் பெறுவது மட்டுமில்லாமல்,
இரண்டு பத்திரிகைகளில்
காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து விளம்பரம்
செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம் படிக்கக்
கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும்.
அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும்
விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தும்
பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த
ஆண்டு உத்தர விட்டது.
எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக் கிறோம் என
நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு நியாயமானதாகக் கருதப்பட முடியாது.
இந்தத் தீர்ப்பின் படி பார்த்தால்
வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கே வேலையில்லை என்றாகி
விடுகிறதா இல்லையா?
மாநில அரசுப் பணியாளர்தேர்வின் மூலம்
தேர்வு செய்யப்படாத பணிகள் இந்த
வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமே மூப்பின் அடிப்படையில்
நியமனம் செய்யப்பட்டு வந்தது.
ஆசிரியர்களுக்கான பணி நியமனமும் அவ்வாறே நீண்ட
காலமாக நடந்து வந்தது கல்வி மாநிலப்
பட்டியலி லிருந்து பொதுப் பட்டியலுக்கு நெருக்கடிக்காலம்
என்ற காரிருள் காலத்தில் களவாடிச்
சென்றதிலிருந்து மாநில அரசுகளின்
உரிமை ஒவ்வொன்றாகப் பறி போக ஆரம்பித்தன.
மத்திய அரசின் தலையீட்டால் (NCTE) தொடக்கப்
பள்ளிக்கான ஆசிரியர்களின் தேர்வுக்கூட நுழைவுத்
தேர்வின் மூலம் நடைபெறத் தொடங்கி விட்டது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பத்தாண்டு,
பதினைந்து ஆண்டு காலம் காத்திருக்கும் ஆசிரியர்
பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் கை பிசைந்து நிற்கும் அவல
நிலை ஏற்பட்டு விட்டது.
கல்வி, வேலை வாய்ப்புகளில் எந்தக்
குளறுபடி களையாவது செய்து, இப்பொழுது இருந்துவரும்
சமூக நீதியின் கழுத்தை நெரிப்பதில்தான் கவனமாகவும்,
குறியாகவும் இருக்கின்றன - ஆதிக்க சக்திகள்.
உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்
முறையீடு செய்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம்
தேர்வு செய்யும்
முறையை நிலை நிறுத்துமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment