Saturday, February 28, 2015

பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்

மார்ச் 5ம் தேதி ப்ளஸ் டூ பொதுத்
தேர்வுகளும், மார்ச் 19ம் தேதி பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வுகளும்
தொடங்கவுள்ள நிலையில்,
அவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்த
ஆய்வுக் கூட்டம் தலைமைச்
செயலகத்தில் நடைபெற்றது.
இதில்
தலைமைச் செயலாளர்
கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர்கள்
ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம்,
முதலமைச்சரின் செயலாளர்கள்,
பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச்
செயலாளர் தா.சபிதா, மின்சாரத்
துறையின் முதன்மைச் செயலாளர்
ராஜேஷ் லக்கானி, போக்குவரத்துத்
துறையின் முதன்மைச் செயலாளர்
டி.பிரபாகர ராவ், அரசுத் தேர்வுகள்
இயக்ககத்தின் இயக்குனர் கே.தேவராஜன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பொதுத்
தேர்வுகளுக்கு செய்யப்பட்டுள்ள
ஏற்பாடுகள் குறித்து விரிவாக
விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆலோசனை விவரங்கள்
----------------------------
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள்
மற்றும் தேர்வு மையங்களுக்கு உரிய
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தல்,
தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்படாத
வண்ணம் பறக்கும் படைக்
குழுவினரை அமைத்து கண்காணித்தல்
, தேர்வு மையங்களில் நிலையான
கண்காணிப்புக் குழுவை அமைத்தல்,
பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில்
உரிய
போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல்
, தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள
பேருந்து நிறுத்தங்களில்
அனைத்து பேருந்துகளையும் நிற்கச்
செய்தல், தேர்வு நேரத்தில்
தடையில்லா மின்சாரம் வழங்குதல்,
மின்வெட்டு ஏற்படும் சூழல் ஏற்படும்
பகுதிகளில் உள்ள பள்ளிகளில்
மின்னாக்கிகளைத் (ஜெனரேட்டர்கள்)
தயார் நிலையில் வைத்தல்
போன்றவை குறித்து
விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
சங்கங்கள் ஏதேனும்
காரணங்களை முன்னிறுத்தி,
தேர்வு நேரத்தில் வேலைநிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபடுவதற்கான
வாய்ப்புகள்
உள்ளனவா என்பது குறித்து தலைமைச்
செயலாளர் கேட்டறிந்ததாகச்
சொல்லப்படுகிறது.
எழுத்துப்பூர்வ அறிக்கை
----------------------------
முன்னதாக, பத்தாம் வகுப்பு மற்றும்
ப்ளஸ் டூ பொதுத்
தேர்வுகளுக்கு செய்யப்பட்டுள்ள
ஏற்பாடுகள் குறித்த விரிவான
அறிக்கையினை பள்ளிக் கல்வித்
துறையிடம், தலைமைச் செயலாளர்
அலுவலகம் கேட்டிருந்தது எனவும்,
அவ்வறிக்கையினை பள்ளிக் கல்வித்
துறையின் முதன்மைச் செயலாளர்
தா.சபிதா இன்றைய கூட்டத்தில்
எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தார்
எனவும் சொல்லப்படுகிறது. அதில்,
தேர்வு ஏற்பாடுகள் மட்டுமல்லாமல்,
விடைத்தாள் திருத்தம்,
தேர்வு முடிவுகள் வெளியீடு,
மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்
போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள
ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக
சொல்லப்பட்டு இருப்பதாக பள்ளிக்
கல்வித் துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment