Monday, February 09, 2015

ஏ.இ.ஓ., அலுவலக பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்விப்பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது

மாவட்டத்தில் 15 உதவி தொடக்க
கல்வி அலுவலகங்கள் உள்ளன.

இங்கு ஆசிரியர்கள் சம்பள 'பில்'
தயாரிப்பு, ஆசிரியர்களின்
மாதாந்திர அறிக்கையை ஆய்வு செய்து '
ரிப்போர்ட்' அளிப்பது,
மாணவர்களுக்கு 14 வகை இலவச
பொருட்கள் வழங்குவது தொடர்பாக
முழு விவரங்கள்
தயாரிப்பது போன்ற பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
பல ஆண்டுகளாக அலுவலக
உதவியாளர் பணியிடங்கள்
நிரப்பப்படவில்லை. மேலும்
இளநிலை உதவியாளர், உதவியாளர்,
டைப்பிஸ்ட் பணியிடங்களும்
காலியாக உள்ளன. இதனால்
ஆசிரியர்களின் ஓய்வூதியப்
பலன்கள் தயாரிப்பு மற்றும்
அலுவலகப் பணிகள் முடங்கும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்க ஆசிரியர்
சிலரை அலுவலக
பணிகளுக்கு ஈடுபடுத்துகின்றனர்.
இதனால் மாணவர் கல்வி பாதிக்கும்
சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாவட்ட செயலாளர்
முருகன் கூறியதாவது: காலிப்
பணியிடங்களில் புதிய
ஊழியர்களை நியமிக்க பல
ஆண்டுகளாக வலியுறுத்துகிறோம்.
குறிப்பாக அலுவலக உதவியாளர்
பணியிடம் தற்போது இல்லை.
ஊழியர் பற்றாக்குறையால்
உசிலம்பட்டி அலுவலகத்தில்
ஜனவரிக்குரிய சம்பளம் பிப்.5ல்
தான் வழங்கப்பட்டது. பொங்கல்
போனசும் பண்டிகைக்கு பின்னர்
தான் கிடைத்தது. ஓய்வூதிய
பணிகளும் கிடப்பில் உள்ளன.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்
அலைக்கழிக்கப்படுகின்றனர்.
அரசு இப்பிரச்னையில் கவனம்
செலுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment