Friday, March 27, 2015

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: தேர்வுத் துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை!

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை
நேற்று மாநிலம் முழுவதும் ஒரு மணி
நேரம் ஆசிரியர்கள் புறக்கணித்தார்கள்.

மாணவர்கள் ‘பிட்’ அடித்தால் ஆசிரியர்கள்
பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தேர்வுத் துறை இயக்குநரின்
சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து
இந்த புறக்கணிப்பை நடத்தினர்.
தேர்வு அறைக்குள் மாணவர்கள் பிட்-
(விடைத் துணுக்குகள்) வைத்திருந்தால்,
அவற்றை தேர்வு கண்காணிப்பாளர் கண்டு பிடிக்காமல் இருந்து பறக்கும் படையோ, வேறு அதிகாரிகளோ கண்டுபிடித்தால தேர்வு கண் காணிப்பாளர் பணியிடை
நீக்கம் செய்யப்படுவார் என்று தேர்வுத்
துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில்
நாகப்பட்டினத்தில் 2 ஆசிரி யர்களும்,
தஞ்சாவூரில் ஒரு ஆசிரியரும்
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதை கண்டித்து மாநிலம் முழுவதும்
ஆசிரியர்கள் நேற்று விடைத்தாள்
புறக்கணிப்பு போராட்டத்தில் ஒருமணி
நேரம் ஈடுபட்டனர்.இதுகுறித்து தமிழ்நாடு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
சங்கத்தின் மாநிலத் தலைவர்
கே.பி.ஓ.சுரேஷ் கூறும்போது, “தேர்வு
அறைக்குள் நுழையும் மாணவர்கள்
காலணி, பெல்ட் ஆகியவற்றை கழற்றி
விடுமாறும், பிட் வைத்திருந்தாலும்
அதை வெளியே வைத்து விட்டு
வருமாறும் அறிவுறுத்த மட்டுமே
ஆசிரியர்களுக்கு உரிமைஇருக்கிறது.
பறக்கும் படை சோதிப்பது போல
மாணவர்களை நாங்கள் உடல்ரீதியாக
சோதிக்கக் கூடாது என்று விதிகள்
உள்ளன. மார்ச் 20-ம் தேதி இந்த சுற்றறிக்கை
வெளியிடப்பட்ட பிறகு, வேலூரில் 30
ஆசிரியர்கள் திருத்தும் பணியிலிருந்து
விடுவிக்கப்பட்டுள்ளனர்,
திருவண்ணாமலையில் 20
ஆசிரியர்களிடமிருந்து விளக்கக் கடிதம்
கேட்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்களிடையே பயம்
நிலவுகிறது. அமைதியான தேர்வு அறை
சூழலை ஏற்படுத்த, ஆசிரியர்களுடன்
தேர்வுத் துறை கலந்து பேசி
முடிவெடுக்க வேண்டும்.
சுற்றறிக்கையை திரும்ப பெற்று,
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட
ஆசிரியர்களை மீண்டும் பணியில்
சேர்த்துக் கொள்ள வேண்டும். மாநிலம்
முழுவதும் உள்ள 68 விடைத்தாள்
திருத்தும் மையங்களுள் 60 மையங்களில்
புறக்கணிப்பு நடந்துள்ளது” என்றார்.

No comments:

Post a Comment