Monday, April 13, 2015

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19ம் தேதி உண்ணாவிரதம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

புதிய பென்சன் திட்டத்தை கைவிட
வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச
கோரிக்கையை வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி
உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்

என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி பொது செயலாளர்
தெரிவித்துள்ளார். நாகையில்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி சார்பில் நல்லாசிரியர்கள்
மற்றும் ஓய்வுபெற்ற
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
பொது செயலாளர் ரங்கராஜன்
பேசியதாவது: 15 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில்
தமிழகம் முழுவதும் மாவட்ட
தலைநகரங்களில் பேரணி
நடத்தப்பட்டது.
பேரணி நடந்து பல நாட்களாகியும்
தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு
அழைக்கவில்லை. புதிய பென்சன்
திட்டத்தை கைவிட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு
வழங்க வேண்டும். அனைத்து
பள்ளிகளிலும் மாணவர்
சேர்க்கையை அரசு முன்னின்று
செய்ய வேண்டும். இடைநிலை
ஆசிரியர்களுக்கு அடிப்படை
ஊதியம், அகவிலைப்படி உள்ளிட்ட
ஊதிய பிரச்னையை தீர்க்க வேண்டும்
உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி தமிழகம் முழுவதும்
ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில்
வருகிற 19ம் தேதி உண்ணாவிரத
போராட்டம் நடக்கிறது என்றார்.

No comments:

Post a Comment