Tuesday, April 21, 2015

30 ஆம் தேதிக்குள் முடிக்க திட்டம்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

பத்தாம் வகுப்பு விடைத்தாள்
திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
இம்மாதம் 30ம் தேதிக்குள் திருத்தி முடிக்க
தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம்
வகுப்புத் தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி
தொடங்கியது.
இந்த தேர்வில் தமிழகம்.
புதுச்சேரியை சேர்ந்த 11827 பள்ளிகளை
சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ,
மாணவியர் தேர்வு எழுதினர். அந்த
விடைத்தாள்கள் அந்தந்த தேர்வு
மையங்களில் தொகுக்கப்பட்டு 70
திருத்தும் மையங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டன. நேற்று 70 திருத்தும்
மையங்களிலும் முழுவீச்சில் விடைத்தாள்
திருத்தும் பணிகள் தொடங்கியது.
இதற்காக ஒவ்வொரு தேர்வு மையத்திலும்
300 முதல் 400 ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, மதுரை,
திருச்சி, உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள
மையங்களில் மட்டும் ஒரு மையத்துக்கு 500
ஆசிரியர்கள் என மொத்தம் தமிழகம்
முழுவதும் 45 ஆயிரம் ஆசிரியர்கள்
விடைத்தாள் திருத்தும் பணியில்
ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை 8 மணி
அளவில் முதன்மைத் தேர்வர்கள்
விடைத்தாள்கள் திருத்தினர். அவர்களை
தொடர்ந்து 9 மணி அளவில் அனைத்து பாட
ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தினர்.
ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா 10
விடைத்தாள்கள் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு நாளும் திருத்தி முடித்த
பிறகு அனைத்து விடைத்தாள்களின்
மதிபெண்களும் பட்டியலிடப்பட்டு
உடனுக்குடன் கணினி மூலம் சென்னை
கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா
சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும்.
விடைத்தாள் திருத்தும் பணி 27ம்
தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று
தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா
15 தாள்கள் வீதம் திருத்த கொடுக்க
வேண்டும் என்றும் தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது. இருப்பினும்
மொழிப்பாடத் தேர்வுக்கான
விடைத்தாள்கள் இரு மடங்காக உள்ளதால்
ஏப்ரல் 30ம் தேதி வரை திருத்தும் பணி
நடக்கும் என்று ஆசிரியர்கள்
தெரிவிக்கின்றனர். இந்த பணி முடிந்து 70
மையங்களில் இருந்தும் மதிப்பெண்கள்
டேட்டா சென்டருக்கு வந்து சேர்ந்ததும்
மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்
தயாரிக்கும் பணி தொடங்கும்.
இதையடுத்து மே மாதம் 2வது வாரத்தில்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை
வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் கடந்த
மாதம் 17ம் தேதி தொடங்கியது. மொத்தம் 8
லட்சத்து 45 ஆயிரம் மாணவ மாணவியரின்
விடைத்தாள்கள் 65 மையங்களிலும்
திருத்தப்பட்டது. இதற்காக சுமார் 40 ஆயிரம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருத்தப்பட்ட விடைத்தாள்களின்
மதிப்பெண்கள் சென்னை கோட்டூர்புரம்
டேட்டா சென்டர் வந்து சேர்ந்தது. தேர்வு
முடிவுகளை வெளியிடுவதற்கு
வசதியாக ரேங்க் பட்டியல் தயாரிப்பும்,
மதிப்பெண் பட்டியல்களும்
தயாரிக்கப்படுகின்றன. தேர்வு முடிவுகள்
மே 10ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்
என்ற இலக்கு வைத்து பணிகள் நடக்கிறது.
அதற்கு அடுத்த சில நாட்களில் அனைத்து
பள்ளிகள் மூலம் மதிப்பெண் பட்டியல்கள்
வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.

No comments:

Post a Comment