Saturday, April 25, 2015

பி.இ.: மே 6-இல் விண்ணப்பம்: 11-இல் எம்.பி.பி.எஸ்.

தமிழகத்தில் பி.இ. படிப்பில்
மாணவர்களைச் சேர்க்க மே 6-ஆம் தேதி
முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அண்ணா
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில்
மாணவர்களைச் சேர்க்க, மே 11-ஆம் தேதி
முதல் விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்படும் என்று மருத்துவக்
கல்வி தேர்வுக் குழு
அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7-ஆம்
தேதி காலை 10 மணிக்கு
வெளியிடப்படுகிறது. அதற்கு
முந்தைய நாளான 6-ஆம் தேதி முதல்,
பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க
விண்ணப்ப விநியோகம் தொடங்க
உள்ளது.
பி.இ. படிப்பில் சேருவதற்கான
விண்ணப்பத்தை https://www.annauniv.edu/
என்ற இணையதளத்திலிருந்து
பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
விண்ணப்பத்தைப் பெறவும், பூர்த்தி
செய்த விண்ணப்பத்தை அளிக்கவும் மே
29-ஆம் தேதி கடைசி நாளாகும். பி.இ.
ஒற்றைச்சாளர கலந்தாய்வு ஜூன் மாத
இறுதியில் தொடங்க உள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம்:
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
விண்ணப்பங்களை, சென்னை உள்பட 19
அரசு மருத்துவக் கல்லூரிகள்,
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு
பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில்,
மே 11-ஆம் தேதி முதல் பெறலாம்.
விண்ணப்ப விநியோகம் மே 28-ஆம் தேதி
வரை நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள், மே 29-ஆம் தேதி மாலை
5 மணிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக்
குழுவுக்கு வந்துசேர வேண்டும்.
ஜூன் 12-இல் தரவரிசைப் பட்டியல்:
விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து,
கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில்
தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை
ஜூன் 12-ஆம் தேதி வெளியிடத்
திட்டமிடப்பட்டுள்ளது என்று
அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment